அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தொடா் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்து இயக்கம் ! தமிழ்நாடு அரசு போக்குவரத்து அறிவிப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., கும்பகோணம் சார்பில், 18.04.2025 புனித வெள்ளி திருவிழாவையொட்டியும் மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டியும், பொதுமக்களின் வசதிக்காக, 17.04.2025 முதல்  திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும.

சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம்,வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 450 பேருந்துகளும்,

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

போக்குவரத்து துறைதிருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 175பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். 18.04.2025, 19.04.2025 மற்றும் 20.04.2025 வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் மொத்தம் 625 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதேபோன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 20.04.2025, ஞாயிற்றுக்கிழமை  சென்னை தடத்தில் 200 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 150 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Admission Enquiry Form

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

போக்குவரத்து துறை18.04.2025 முதல் 20.04.2025 வரை புனித வெள்ளி மற்றும் வார இறுதியுடன் தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவைக்கேற்ப போக்குவரத்துக் கழகங்கள் கணித்து  அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவுசேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android /  I  phone கைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கூட்ட நெரிசலை தவிர்த்து எவ்வித சிரமம் இன்றி பயணிக்க  “மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android /  I  phone கைபேசி மூலமாகவும்” முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி இப்பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து,   நிர்வாகஇயக்குநர்  இரா.பொன்முடி அவர்கள் தொிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.