மூடப்பட்ட தலைமை தபால் நிலைய ஏடிஎம் ! அல்லல்படும் ஒய்வூதியர்கள்!
கடலூர் மாநகராட்சியின் தலைமை தபால் நிலையம் (607-001) சிறப்பாக இயங்கி வருகிறது, ஆனால் தபால் இலாகவும் பிஎஸ்என்எல் தொலைபேசித்துறையைப் போல கழுதைதேய்ந்து * கட்டெறும்பாக* மாறிவிட்டது, தபால் அலுவலகத்தில் ஒரு பகுதியை பாஸ்போர்ட் ஆபீஸ் அபகரித்துவிட்டது! அருகில் தொலைபேசி அலுவலகமும் ஒரு மத்திய அரசுத்துறையால் அபகரிக்கப்பட்டுள்ளது!
ஒஹோ என்றிருந்த பிஎஸ்என்எல் மிகவும் நோஞ்சானாக மாறி விட்ட அவலமான நிலை! தலைமை தபால் அலுவலகத்தின் வாசலில் ஒரு ஏடிஎம் உள்ளது. அதில் தபால் துறை அலுவலகத்தில் பணி புரியும் / பணி புரிந்த ஒய்வூதியர்களுக்காக இயங்கி வந்தது. அந்த அலுவலக ஏடிஎம் தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது!
மேலும் புதிய ஏடிஎம் கார்டுகள் பற்றாக்குறை உள்ளது, ஏற்கனவே வழங்கப்பட்ட கார்டுகளும் கடந்த 31/03/25 அன்றோடு காலாவதி ஆகிவிட்டன, பல ஒய்வூதியர்கள் உள்ளே வரிசையில் நிற்க வேண்டிய அவலம்!
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பல வயதான (வயது-75-க்கு) மேற்பட்டவரகளுக்கு அந்த ஏடிஎம் உதவிகரமாக இருந்தது! எனவே அதை மீண்டும் திறந்து செயல்பட வைக்க வேண்டும் என்பது ஆயிரக்கணக்கான ஒய்வூதியர்களின் கோரிக்கை!
*கடல்நாகன்*