500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆசாமி கைது !
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மருதாண்டாக்குறிச்சி, ஆளவந்தான் நல்லூர், எண்.5/4 மேட்டு தெரு பகுதியில் வசித்து வரும் அனி பவுல்ராஜ் 50/25 த.பெ பிரான்சிஸ் என்பவர் அவ்வப்போது மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
பணத்தின் மீது உள்ள ஆசையின் காரணமாக தாமாகவே பணத்தை அச்சிட்டு கடந்த சில மாதங்களாக பணத்தை புழக்கத்தில் விட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவரது தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளது. வேலைக்கு ஏதும் செல்லாமல் பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விட்டால் ஆடம்பரமாக வாழலாம் என்ற நோக்கில் கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு செலவு செய்து வந்துள்ளார்.

எனவே, கள்ள நோட்டு புழக்கம் அப்பகுதி மற்றும் மாநகர பகுதிகளில் பரவி வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண்.8939146100-ற்கு வந்த தகவலின்படி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் திரு. வேலழகன். காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை கடந்த ஒரு வார காலமாக கண்காணித்து வந்த நிலையில் (29.04.2025) காலை 11.00 மணியளவில் ஆளவந்தான் நல்லூர், மேட்டு தெரு பகுதியில் தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தபோது, அவர் இரு சக்கர வாகனத்தில் ஒரு பையில் கள்ள நோட்டுகளை வைத்து தனது வீட்டிலிருந்து வெளியே வரும்பொழுது மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டபோது அவர் சட்டை பையில் நான்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகளும், கைப்பையில் நோட்டுகள் வைத்திருந்ததாகவும், தெரிய வந்துள்ளது.

அவரிடமிருந்து EPSON கலர் பிரிண்டர் 1 2) Samsung Galaxy A12 Smart Phone 1 (IMEI 1-356770915101388 IMEI 2-357196295101385) 3) பிரிண்டா கலா் இங்க் பாட்டில்கள் 4) 85 GSM வெள்ளை பேப்பர்கள் பிரித்த நிலையில் -3 பண்டல்கள் 5) SBI Pass Bool Account No.43591900257-16) ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கட்டிங்க எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் -38, 7) பாதி வெள்ளை தாளில் வெட்டப்படாமல் உள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள்-48, 8) முழு வெள்ளை தாளில் அச்சிடப்பட்டு வெட்டப்படாமல் உள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள்-17 9) அசல் ரூபாய் நோட்டுகள் -11. 10) 3 இரும்பு ஸ்கேல்கள் 11) 3 பேப்பர் வெட்டும் கத்திகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது தொடர்பாக மல்லியம்பத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் (29.04.2025) சோமரசம்பேட்டை காவல் நிலைய குற்ற எண்.150/25, ச.பி. 178, 179, 180, 181 BNS-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளார்.
மேலும், இது போன்று போலியான கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடக்கூடியவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால், உடனடியாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும்.