மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம்!

இந்த வார அங்குசம் வார இதழில்…

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா  திருக்கல்யாணத்தை தொடர்ந்து  11 ஆம் நாள் நிகழ்வாக திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சிவா என்ற பக்தி முழக்கம் விண்ணைப்பிளக்கும் வகையில் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்துவரும் பக்தர்கள்  பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் 4 மாசி வீதிகள்…..

உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா  கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் நடைபெற்று முடிவடைந்த நிலையில் நேற்று சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை சித்திரை தேரோட்டம்இதனை தொடர்ந்து விழாவின் முத்தாய்ப்பாக  இன்று காலை திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருத்தேரோட்டத்தை முன்னிட்டு  அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை  சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியதேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும்,  சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும்எழுந்தருளினர்.

மதுரை சித்திரை தேரோட்டம்தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப்பணசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து பெரிய தேர் புறப்படாகி அதை தொடர்ந்து  சிறிய தேரும் புறப்பட்டதுசுவாமி அம்மன் திருத்தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்லும்போது அவற்றை தொடர்ந்து  முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகப்பெருமானும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் செல்லும் சுவாமி, அம்மனின் திருத்தேரானது மதுரை நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வந்து பின்னர் கீழமாசி வீதியில் உள்ள தேரடியை வந்து அடையவுள்ளது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

4மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என  பக்தி  முழக்கம் விண்ணைப்பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருவிழாவினை காண மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால்  காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

—    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.