நீங்கள் சொல்லித்தான் தமிழகத்தில் இ.டி. ரெய்டு நடைபெறுகிறது என தெரிகிறது – நயினார் நாகேந்திரன் !
மதுரை தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்தபோது:
நாட்டில் முதன்மையான பிரச்சனை தேசிய உணர்வு நமது நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும் பிரதமரை பாராட்டும் விதமாக மூவர்ணக் கொடிய யாத்திரை தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
நேற்று திருச்சியிலும், நாளை மதுரையிலும் இன்று திருப்பூர் ஆகிய பகுதிகளில் மூவர்ணக் கொடி யாத்திரை நடைபெறுகிறது.
மேலும் சட்டமன்றத் தொகுதி வாரியாக மூவர்ண கொடி யாத்திரையும் நன்றி தெரிவிக்கும் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி படமும் தேசியக்கொடி மட்டுமே பங்குபெறும்.
மதுரையில் மேற்கு, கிழக்கு, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மார்க் அலுவலர்கள் வீடுகளில் ED ரெய்டு
ED என்பது ஒரு தனிப்பட்ட அமைப்பு அதில் தேவை இல்லாமல் ரெய்டுகள் நடைபெறாது. புகார்கள் ஏதேனும் இருப்பின் அதனைத் தொடர்ந்து ரைடு குறித்த ஆலோசனைகள் நடைபெறும்.
இதுபற்றி எனக்கு முழுமையாக தெரியாது. எதனால் இந்த ரெய்டு நடைபெறுகிறது என தெரிந்த பின் பதில் கூறுகிறேன். நீங்கள் சொல்லித்தான் எனக்கே ரெய்டு நடைபெறுகிறது என தெரிகிறது.
தவெக தலைவர் விஜய், பாஜக கூட்டணியில் பங்கு பெற விருப்பமில்லை என கூறியது அவருடைய சொந்த விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுவே எனது விருப்பமும். நாட்டு மக்கள் நலன் கருதி அந்தந்த கட்சி தலைவர் முடிவு எடுக்க வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது தேர்தலுக்கு பேச்சுவார்த்தை நடக்க வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து பின்னா் அறிவிக்கப்படும்.
தமிழக முழுவும் 2031ல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் கூறுவது
கருத்துக்கள் சொல்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. அதை தீர்மானிக்கக் கூடிய சக்தி மக்களிடம் உள்ளது. கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் சமமாக போட்டியிட்டார்கள் யார் முதலமைச்சர் என்பது கேள்வியாக இருந்தது. திமுகவா காங்கிரசா என்ற நிலை ஏற்பட்ட போது எம்ஜிஆர் நாட்டின் முதலமைச்சர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் கட்சி தீர்மானிக்க கூடாது என முடிவு எடுத்ததன் பேரில் தமிழக மக்கள் முதலமைச்சரை தேர்வு செய்தனர். அவர் சொல்வதை என்னுடைய கருத்தாக நானும் நினைக்ககிறேன்.
தேசிய கல்வி கொள்கை திட்டம்
ஏற்கனவே தமிழ் ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஒன்று எடுக்கலாம் அது மலையாளம் கன்னடம் இன்னொரு மொழி கூட இருக்கலாம். அந்த மொழியின் கலாச்சாரம், பண்பாடு, அறிவியல் தெரிந்து கொள்ள முடியும் ஆகையால் மூன்றாவது கல்வியை தேர்ந்தெடுக்க அவசியம் வேண்டும். இன்றைய நாகரீக காலத்தில் செல்போன் பயன்படுத்துகிறோம் செல்போன் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. மூன்று வயது குழந்தை முதல் செல்போன் உபயோகிக்கின்றனர். நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி எல்லாம் வளர்ந்து கொண்டே உள்ளது அதனால் மாணவர்களுக்கு கல்வித் தரன் உயர்த்துவதற்காக எடுக்கக்கூடிய நிலைப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அமித்ஷா வந்தது வேறு விஷயம் அதனால் அன்னைக்கு ஓபிஎஸ்சி சந்திக்க முடியவில்லை ஆனால் இருவருமே கூட்டணியில் உள்ளனர். இபிஎஸ்சும் சரி ஓபிஎஸ்சும் சரி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்களின் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்து ஏதும் பேச வேண்டாம் தற்போதுள்ள நிலையில் பொதுச்செயலாளராக இபிஎஸ் உள்ளார். ஆகையால் அதை மட்டுமே பேச முடியும்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர மாட்டோம் என திருமால் கூறியது. திருமா எனது நண்பர் அவா் பாஜக உடன் கூட்டணி தொடருகிறாரா அல்லது திமுகவுடன் கூட்டணி தொடர்கிறாரா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உச்ச நீதிமன்றத்தில் கவர்னர் மீது அளித்த மனு ,
ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளது சட்டப்பிரிவு 200 ஆளுநர் தான் பயன்படுத்த முடியும் 201 சட்டப்பிரிவை குடியரசு தலைவர் தான் பயன்படுத்த முடியும். இதில் நீதிமன்றத்திற்கு எந்த நீதி வழங்க வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளது. விதிமுறைகள் மீறும் போது யார் என சர்ச்சைகள் போடக்கூடாது. நீதிமன்றங்கள் குறித்து நாம் விவாதங்கள் செய்யக்கூடாது. நீதிமன்றமே சட்ட போடும் சூழ்நிலை ஏற்பட்டால் நாளைக்கு அரசியலமைப்பு சட்டங்கள் எவ்வாறு ஏற்ற முடியும்.
பாஜக கட்சி
கட்சி தற்போது வளர்ந்துள்ளது. தமிழக அரசியலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு இருக்குமா என்றால் முதலில் வெற்றி பெறுவோம் அதன் பின்பு பார்ப்போம். மதுரை நக்கீரருக்கு நீதி கிடைத்த மண் இது கண்டிப்பாக நீதி கிடைக்கும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.