மதுரை தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
மதுரையில் தனியார்(வாசன்) கண் மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் இன்று முதல் வருகின்ற மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் பார்வை குறைபாடு, கண் புரை மற்றும் சோம்பேறி கண், மாறு கண் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது.
முகாமிற்கு வருகை தரும் பார்வை திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான கண் பயிற்சி விளையாட்டுக்கள், புதிய கருவிகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இரவு நேரங்களில் அதிகம் செல்போன் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும். இணையதள வாயிலாக பயிலும் மாணவர்கள் ஸ்மார்ட் டிவி வாயிலாக கற்றல் மேற்கொண்டால் கண் பாதிப்பு குறையும். தூங்கு முன் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே செல்போன் பயன்படுத்துதல் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பிறந்த குழந்தைகளின் கண் பாதிப்பு இருந்தால் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சை மேற்கொண்டால் அவர்களது கண் பாதிப்பில் இருந்து தடுக்கப்படலாம். பெற்றோர்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.
உலக சுகாதார மையத்தின் வலியுறுத்தலின்படி பிறக்கும் குழந்தைகளில் 50 சதவீத குழந்தைகள் கண் குறைபாடுடன் பிறப்பதாகவும்., அவர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டால் பார்வை குறைபாடு., கண் புரை, மாறுகண் மற்றும் சோம்பேறி கண் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தடுக்கப்படலாம் என்றார்.
— ஷாகுல், படங்கள் :ஆனந்தன்.