வாடகை தராததால் ஓட்டுநர்களால் தாக்கப்பட்ட இளைஞர் கவலைக்கிடம் – நடந்தது என்ன?
திருச்சி; ரயில் நிலையத்தில் வாடகை தராததால் ஓட்டுநர்களால் தாக்கப்பட்ட இளைஞர் கவலைக்கிடம்- நடந்தது என்ன?
திருச்சி மத்திய ரயில் நிலையத்திற்கு இன்றுக்காலை ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.
அவர், ரயில் நிலைய வளாகத்திற்குள் உள்ள கால் டேக்ஸியில் ஏறி ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்றுக் கூறியுள்ளார். ஓட்டுநரும் அழைத்துச் சென்றுள்ளார். காலையில் எடுத்த காராணது திருச்சியில் பல இடங்களை சுற்றிய பின் மீண்டும் ரயில் நிலையத்திற்கே மீண்டும் வந்துள்ளது.
அப்போது காரில் பயணித்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் திடீரென காரின் கதவை திறந்து ரயில் நிலையத்திற்கு ஓடியுள்ளார். பின்னர் அந்த நபரை ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தபோது, அவர்களோ விசாரித்துவிட்டு இதெல்லாம் நாங்க ஒன்னுன் பண்ணமுடியாது என்று அழைத்து வந்தவர்களிடமே ஒப்படைத்துள்ளனர்.
அவர்கள் அந்த இளைஞரை வெளியில் இழுத்து வந்து 10 க்கும் மேற்பட்டோர் தாக்கியதில், திடீரென வலிப்பு வந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் தண்ணீர் கொடுத்து மீண்டும் அந்த இளைஞரை தாக்கியதில் அவர் சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார்.
இச்சம்பவம் திருச்சி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-இந்திரஜித்