திருச்சி – TNSDC திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க

0

திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள ஸ்ரீரங்கம், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.   18-35 வயதுக்குட்பட்ட பட்டதாரி, ஜ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பள்ளி இடை நின்றவர்கள் உட்பட வேலைவாய்ப்பு தேடும் மாணவர்களுக்கான திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியை வெற்றிகரமாக  முடித்தால் ரூ.6000/- ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மேலும் தகவலுக்கு மற்றும் பதிவு செய்ய https://www.tnskill.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு 76958 56957,  76049 33100, 82482 52577  ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பயிற்சிகள்

  1. Surveyor  – கால அளவு 180hrs, கல்வித்தகுதி HSC / ITI
  2. House Wiring Electrician – கால அளவு 240hrs, கல்வித்தகுதி HSC / ITI
  3. Plumber Basic – கால அளவு 150hrs, கல்வித்தகுதி HSC

இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமாார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.