அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளா? புதுக் காரணம் ஆய்வில் கண்டுபிடிப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளா?  உ.ம். அதிக உதிரப்போக்கு- வழக்கமான ஹார்மோன் பிரச்சனைகள் தவிர்த்து புதுக் காரணம் ஆய்வில் கண்டுபிடிப்பு.

பெண்களுக்கு மாதவிடாய் சமயம், அடிவயிறு வலி, இடுப்பு, கால்களில் பிடிப்பு, சிந்தனை மாற்றம்(Mood Swings) ஏற்பட்டால் அவை கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மாதவிடாய் சமயம் அதிக உதிரப்போக்கு, அதிக நாள் உதிரம் வெளியேறுதல், மாதவிடாய் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் திடீர் உதிரப்போக்கு… போன்றவைகளுக்கு வழக்கமான ஹார்மோன் பிரச்சனைகள் தவிர்த்து, இரத்தத்தில் அதிக இன்சுலின் அளவும் ஒரு முக்கிய காரணமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில்,” Menopause” என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையில், பெண்களின் மேற்சொல்லப்பட்ட மாதவிடாய் கோளாறுகள் 3 மடங்கு அதிகமாக அதிக இன்சுலின்  இரத்தத்தில் உள்ள பெண்கள் மத்தியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மருத்துவர் ஆண்ட்ரியா சால்செடா- லோமா லிண்டா மருத்துவ பல்கலைக் கழகம், கலிபோர்னியா அவர்கள் செய்த ஆய்வில் அதிக உதிரப்போக்கிற்கு அதிக இன்சுலின் இரத்தத்தில் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதால், அத்தகைய பெண்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவை அளந்து அதைக் கட்டுப்படுத்தவும், வாழ்வியல் மாற்றங்கள், சர்க்கரை தொடர்பான உணவுமுறை மாற்றங்களை நடைமுறையில் கொண்டு வரவும் கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாதவிடாய் கோளாறுகளாபொதுவாக 30% பெண்களுக்கு மாதவிடாய் சமயம், பிரச்சனைகள் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களுக்கு உடல் உபாதைகள் தவிர்த்து மன அழுத்தமும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடம்பில் இன்சுலின் ஹார்மோன் செயலுக்கு எதிர்ப்புத்தன்மை ஏற்பட்டால்(Insulin Resistance),சர்க்கரை  நோய்-வகை-2 ஏற்படும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் விசயம்.

அதனால் இருதயம், சிறுநீரகம், கண்கள் போன்ற உறுப்புகள் பாதிப்படைவது உறுதியானாலும், கர்ப்பப்பையிலும் பாதிப்பு ஏற்டுவது குறித்து அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மருத்துவர் ஆண்ட்ரியா சால்செடா அவர்கள், 18-54 வயதுடைய 205 பெண்கள் மத்தியில் 2019-2023 இடைப்பட்ட காலத்தில் செய்த ஆய்வில், 116 பெண்களுக்கு (அதிக இன்சுலின் இரத்தத்தில் இருந்துள்ளது) மாதவிடாய் கோளாறுகள்- முறையற்ற உதிரப்போக்கு (Irregular Bleeding) – அதிக உதிரப்போக்கு இருப்பது தெரியவந்துள்ளது. 89 பெண்களுக்கு வழக்கமான உதிரப்போக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதிக இன்சுலின் உள்ளவர்கள் மத்தியில் அதிக உதிரப்போக்கு 3 மடங்கு அதிகமாக இருந்தது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதிக இன்சுலின் நாள்பட்ட சுழற்சியை (Chronic Inflammation) கர்ப்பப்பையின் இரத்தக் குழாய்களில் ஏற்படுத்துவதால் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதனால் இது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள Menopause Society மருத்துவ இயக்குநர். ஸ்டீபானி பாபியன் அவர்கள் வலியுறுத்துகிறார்.

மாதவிடாய் கோளாறுகளாபெண்கள் மத்தியில் அதிகம் எற்படும் Polycystic Ovarian Disease(PCOD) நோய் பாதிப்பின் போது மாதவிடாய் வழக்கமாக வருவதற்கு பதில் அதிக நாள் தள்ளிப்போவது என்பது ஒரு முக்கிய அறிகுறியாகும்.

மாதவிடாய் வழக்கமாக வராமல் அடிக்கடி தள்ளிப்போவதும் (Infrequent Bleeding), முறையற்ற உதிரப்போக்கும் (Irregular Bleeding) ஏற்படுவதற்கு அதிக இன்சுலின் காரணம் என்று (Hyper Insulinomia) வாங் மற்றும் குழுவினர் 2020 ல் செய்த ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது.

அதிக இன்சுலின் இருந்தாலும், இன்சுலின் எதிர்ப்புத்தன்மை இருப்பதும் ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சுருக்கமாக அடுத்தமுறை பெண்களுக்கு மாதவிடாய் சமயம் அதிக உதிரப்போக்கு, அதிக நாள் உதிரப்போக்கு, மாத விடாய் இடைப்பட்ட காலத்தில் திடீரென ஏற்படும் உதிரப்போக்கு பிரச்சனை இருந்தால் அதற்கு அதிக இன்சுலினும் காரணமாக இருக்க முடியும் என்பதால், அதையும் ஆய்வு செய்து உறுதிபடுத்தி அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சையை மேற்கொள்வது சிறந்தது.

 

—    மரு.வீ.புகழேந்தி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.