நியோமேக்ஸ் | தனி டி.ஆர்.ஓ, தனி விசாரணை அதிகாரி ஏன் அவசியம் ?
நியோமேக்ஸ் | தனி டி.ஆர்.ஓ, தனி விசாரணை அதிகாரி ஏன் அவசியம் ?
நியோமேக்ஸ் மோசடி வழக்கு நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் தனிச்சிறப்பான அணுகுமுறை காரணமாக, வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. நீதியரசரின் எண்ண ஓட்டத்திற்கேற்ப, வழக்கின் போக்கும் நகரத் தொடங்கினால்தான் தீர்வு கிடைக்கும். ஆனால், நடைமுறை யதார்த்தமோ, பல்வேறு முட்டுக்கட்டைகளை கொண்டதாக அமைந்திருக்கிறது.

நியோமேக்ஸ் வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த டி.எஸ்.பி. மனிஷா மாற்றப்பட்டதையடுத்து, அதனிடத்தில் திண்டுக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. இம்மானுவேல் ராஜ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தையும் அவர்தான் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். சிறப்பு விசாரணை அதிகாரியின் கீழ் இருந்த வழக்கு தற்போது, கூடுதல் பொறுப்பாக பக்கத்து மாவட்டத்துக் டி.எஸ்.பி.க்கு வழங்கப்பட்டிருப்பது இந்த வழக்கின் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்து, வழக்கமான டி.ஆர்.ஓ. க்களால், இதுபோன்ற தனிச்சிறப்பான வழக்குகளையும் சேர்ந்து பார்ப்பது என்பது பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதாக அமைந்திருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த பணிநிலையில் செயலாற்றிவரும் டி.ஆர்.ஓ.க்கள் வழக்கமாகவே கூடுதல் பணிச்சுமைகளோடுதான் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், நியோமேக்ஸ் போன்ற விவகாரங்களையும் கவனிக்க வேண்டும் என்பது, அவர்களின் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட விவகாரமாகவே நீடிக்கிறது.
இந்த பின்னணியிலிருந்தே, இந்த வழக்கில் தனி டி.ஆர்.ஓ. மற்றும் தனி விசாரணை அதிகாரி நியமிக்கப்பட வேண்டியது ஏன் அவசியமாகிறது, என்பதை அலசுகிறது, இந்த வீடியோ.