தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதிய நிர்வாக இயக்குநர் பதவியேற்பு !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  கும்பகோணம் தலைமையகத்தில் புதிய நிர்வாக இயக்குநராக K.தசரதன் அவர்கள்  பணி ஏற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  கும்பகோணம் தலைமையகத்தில் புதிய நிர்வாக இயக்குநராக K.தசரதன் அவர்கள்  (04-07-2025)  பணி ஏற்றுக்கொண்டார். இதற்கு முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டத்தில் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  கும்பகோணத்தில் இதற்கு முன்பு பணியாற்றிய நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி அவர்கள் பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

K.தசரதன்
K.தசரதன்

பணியேற்பு நிகழ்ச்சியில் முதன்மை நிதி அலுவலர் T.சந்தானகிருஷ்ணன், பொது மேலாளர்கள் K.சிங்காரவேலு (கூட்டாண்மை அலுவலகம்), R.முத்துக்குமாரசாமி (கும்பகோணம்),K.முகமதுநாசர் (புதுக்கோட்டை), D.சதீஷ் குமார் (திருச்சிராப்பள்ளி), K.ரவிக்குமார் (காரைக்குடி), முதுநிலை துணை மேலாளர், (மனிதவள மேம்பாடு H.ராஜேந்திரன், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.