ஜூலை 25-ல் ‘மாரீசன்’ ரிலீஸ்!

0

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் படம் ‘மாரீசன்’. ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு ‘வைகைப்புயல்’ வடிவேலு & ஃபக்த் பாசில் இணைந்து நடிக்கும் இப்படத்தை சுதீஷ் சங்கர் டைரக்ட் பண்ணியுள்ளார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ளார் வி.கிருஷ்ணமூர்த்தி.

படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பு ஈ-4 எக்ஸ்பெரிமெண்ட்ஸ். படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பிஎல் தேனப்பன், லிவிங்ஸ்டன் ரேணுகா, ஷரவண சுப்பையா, ஹரிதா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : கலைச்செல்வன் சிவாஜி, இசை : யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங் : ஸ்ரீஜித் சாரங், ஆர்ட் டைரக்டர் : மகேந்திரன், பி.ஆர்.ஓ.: யுவராஜ்.

சமீபத்தில் ‘மாரீசன்’ டீசர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இந்த நிலையில் படம் வருகிற 25—ஆம் தேதி ரிலீசாகும் என சூப்பர்குட் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

  —      மதுரை மாறன்

Leave A Reply

Your email address will not be published.