திருச்சியில் ஸ்ரீ குமரன் ஏ /சி மினி ஹால் திறப்பு…
திருச்சி தென்னூர் அண்ணா நகர் மெயின் ரோட்டில் உக்கிரமாகாளியம்மன் கோவில் எதிரில் ஸ்ரீ குமரன் ஏ/சி மினி ஹால் புதிதாக திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் கே. என் .நேரு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
200க்கும் மேற்பட்ட இருக்கைகளுடன் 60 பேர் உணவருந்தும் வசதி கொண்ட டைனிங் ஹால், Wi fi, விசாலமான கார் பார்க்கிங், CCTv கேமரா, வசதியுடன் கூடிய இந்த மஹால் ஸ்ரீ குமரன் ஈவன்ட்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது . பிறந்த நாள், பாராட்டு விழா, நிச்சயதார்த்தம் போன்ற விழாக்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் மேடை அலங்காரம், கேட்டரிங் சர்வீஸ், ஆடியோ லைட்டிங், போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் , DJ, நடன நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து விதமான மேனேஜ்மென்ட் சர்வீஸ் செய்து தருகின்றனர். இந்த திறப்பு விழாவில் மேயர் அன்பழகன், கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், கவுன்சிலர்கள் முத்து செல்வம் , கமால் முஸ்தபா, மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், பகுதி செயலாளர் போட்டோ கமால் ,வட்டச் செயலாளர் ஹரி, முத்துக்குமார், நளாயினி நாகராஜன், இளையராஜா, வட்ட பிரதிநிதி குண்டு செல்வம், தொழிலதிபர் ஆர். எஸ். தமிழ் செல்வன், உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்தவர்களை உரிமையாளர்கள் சிவராமன், சந்தான கோபால கிருஷ்ணன், சதீஷ்குமார் ஆகியோர் வரவேற்று சிறப்பித்தனர்.