நட்டி[எ] நட்ராஜின் அமானுஷயப் படம் ‘நீலி’
‘உதயா கிரியேஷன்ஸ்’ பேனரில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் ‘நீலி’. ’நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ படங்களை டைரக்ட் பண்ணிய எம்.எஸ்.எஸ். டைரக்ட் பண்ணும் இப்படத்தில் நட்டி [எ] நட்ராஜ் கதாநாயகாக நடிக்கிறார். 2400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து அமானுஷய ஜானரில் உருவாகும் ‘நீலி’ குறித்து டைரக்டர் எம்.எஸ்.எஸ். என்ன சொல்றாருன்னா..
“வரலாற்று விஷயங்கள் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்ட பின் தான் ‘நீலி’யின் கதையை எழுத ஆரம்பித்தேன். அதே நேரம் கொஞ்சம் கற்பனையையும் மிக்ஸ் பண்ணியுள்ளேன். கதையைக் கேட்டதுமே நடிக்க ஒத்துக் கொண்டார் நட்டி. இவருடன் நடிக்கும் இரண்டு ஹீரோயின்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் குறித்த தகவல்களுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்” என்றார்.
— மாறன்