வேல்ஸ் பிலிம் அமர்க்களம்! தனுஷின் 54-ஆவது படம் ஆரம்பம்!
வரிசையாக ஏழெட்டுப் படங்களைத் தயாரிக்கப் போவதை லிஸ்ட் போட்டு கடந்த வாரம் அறிவித்தார் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனலின் ஐசரி கணேஷ். அந்த லிஸ்டில் முதலாவதாக தனுஷ் நடிக்கும் 54—ஆவது படம் ஜூலை.10-ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பமானது. ‘போர்த் தொழில்’ மூலம் மிகவும் பாப்புலரான விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குகிறார். ‘போர்த் தொழில்’ படத்தில் திரைக்கதையில் உறுதுணையாக இருந்த ஆல்பிரட் பிரகாஷ் தான் இதிலும் ஸ்கிரீன்ப்ளே சப்போர்ட்டர்.
தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு கமிட்டாகியுள்ளார். மற்ற கேரக்டர்களில் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூட், பிரித்வி பாண்டியராஜன் என வேல்யூபிள் ஸ்டார்ஸ் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர், இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங் : ஸ்ரீஜித் சாரங், தயாரிப்பு வடிவமைப்பு : மாயப்பாண்டி, பி.ஆர்.ஓ.: சதீஷ் & சிவா [ எய்ம் ].
— மதுரை மாறன்