ஆசிரியா்கள் நியமனத்தில் தமிழக அரசு காட்டும் அக்கறைதான் என்ன? ஐப்பெட்டோ வா.அண்ணாமலை கேள்வி

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கல்விக்கண் தந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகள் தோறும் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்!

தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் காட்டும் அக்கறைதான் என்ன? என்று தழிழக ஆசிரியர்கள் கூட்டணி ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை கேள்வி எழுப்பிவுள்ளார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் 2342 இடைநிலை ஆசிரியர்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்! நியமனத்திற்கு வரவேற்பு.

ஆசிரியர் பணியேற்க உள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வா.அண்ணாமலை, ஐபெட்டோ
வா.அண்ணாமலை, ஐபெட்டோ

தமிழ்நாட்டில் 38 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 10 ஆயிரத்துக்கும் கூடுதலாக உள்ளன.

ஆனால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 5614.

5614 இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படாதது ஏன்?

29 ஆயிரம் பேர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனத் தேர்வினையும் முடித்து வைத்து இருப்பவர்களில் பலர் 50 வயது நிறைவு பெற்றவர்கள் உள்ளார்கள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தகுதித் தேர்வு முடித்து ஆசிரியர் பணி நியமனம் கேட்டு வலியுறுத்தி போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தபோது தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு மீண்டும் நியமனத் தேர்வா?

ஆட்சிக்கு வந்தவுடன் நியமனத் தேர்வினை இரத்து செய்துவிட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஆவேசக் குரலில் பேசி உறுதியளித்ததை எவரும் மறக்கவில்லை!

29 ஆயிரம் பேர் நியமனத் தேர்வும் முடித்துவிட்டார்கள். அரசு அறிவித்திருக்கிறவாறு 5614 பேருக்காவது இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்து அறிவித்திருக்கலாமே? நியமனம் செய்யப்படாதது ஏன்?

நியமனம் செய்யப்பட்டுள்ள 2342 இடைநிலை ஆசிரியர்களையும் – புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள 14 கல்வி மாவட்டங்களுக்கு மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

32 வருவாய் மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

பள்ளிக்கல்வித் துறைக்காக 46 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது!

Anbil Mahesh Poyyamozhi - Wikipediaபள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவு பெற்றுவிட்டது.

பொதுத் தேர்தலுக்கு இன்னமும் 8 மாதங்கள்தான் உள்ளன. இதுவரையில் போராடி வரும் ஆசிரியர் இயக்கங்களை அழைத்துப் பேசி ஒப்புதல் அளித்த கோரிக்கைகளையாவது தீர்வு கண்டதுண்டா?

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் ஜூலை 17, 18-ல் மாவட்டத் தலைநகர்களில் மறியல் போராட்டம் நடத்துகிறார்கள்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அந்த இரண்டு நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்தி கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்கிறாராம்!

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மாவட்டத் தலைநகர்களில் மறியல் போராட்டம் நடத்துகிற மாவட்டங்களுக்கு சென்று பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் போட்டிக் கூட்டம் நடத்துவதேன்?

திருச்சியில் 12.7.2025 அன்று முப்பெரும் விழா பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்டது. மூத்த அமைச்சர் கே.என்.நேரு,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அழைப்பின் பேரில் கலந்து கொண்டு அண்ணா தலைமைத் தத்துவ விருது, பேராசிரியர் க.அன்பழகனார் விருது பெற்ற பள்ளிகளுக்கு வழங்கி பெருமை சேர்த்துள்ளார்கள். வரவேற்று பாராட்டி மகிழ்கிறோம்!

100 நாட்களில் ‘Challenge School’ தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

விருதுகளை சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களிடம் வழங்கும் பொறுப்பினை ஒப்படைத்துள்ளார்கள். அழைக்கப்பட்டது ஏன்?

அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல! பெருமையின் அடையாளம் என்று அமைச்சர் பேசுவதை கேட்கிறபோது தேனாக இனிக்கிறது. பணி நிறைவு பெற்றால் நியமனம் இல்லை. அந்தப் பணியிடங்கள் காலிப் பணியிடங்கள் இல்லை. நினைவுப் பணியிடங்களாக வைக்கப்பட்டு வருகிறது!

தற்காலிக ஆசிரியர் நியமனம் ! குறைந்த ஊதியம் ! தினக்கூலி சம்பளம் கூட இல்லை.

சிறப்பாசிரியர்கள் – பகுதி நேர ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். கண்டுகொள்ளவே இல்லை.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களைவதற்கு அமைக்கப்பட்ட குழு என்னவாயிற்று?

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் காலத்திலிருந்து தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு தலைவர் கலைஞர் ஆட்சிக்காலம் மட்டுமல்ல. அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் நடைமுறைபடுத்தப்பட்டு வந்த ஒன்றிய அளவில் இருந்த முன்னுரிமைகளை தாங்கள் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியலுக்கான அரசாணை எண்.243-ஐ, 21.12.2023 அன்று வெளியிடப்பட்டது.

பெண் ஆசிரியர்களுக்கு பெருத்த பாதிப்பு! ஆனாலும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு புகழாரத்தினை பெற்று பெருமகிழ்ச்சியடைகிறீர்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் அரசு கொண்டு வந்த தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி – பதவி உயர்வு இல்லாத பதவிக்கு தேர்வு நிலை தர ஊதியம் ரூ.5400 அனுமதிக்கப்பட்டு வந்தது. தணிக்கைப் பிரிவு என ஒன்றை ஏற்படுத்தி பணப்பயன் பறிப்பு, 10, 15 லட்சம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு தர ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்பட்டு ஊதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பாதிப்பு இல்லை. தலைவர் கலைஞர் அவர்கள் காலத்தில் பெற்றுள்ள பணப்பயன்கள், குறிப்பாக கல்வித்துறை அலுவலர்களால் அரசாணைகளை புறந்தள்ளி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. பி.லிட்., பி.எட்., ஊதிய உயர்வு – பிடித்தம், பி.காம்., எம்.காம்., ஊக்க ஊதிய உயர்வு 1.7.2007க்கு முன்னர் பெற்றவர்களுக்கும் பிடித்தம் செய்யப்படுகிறது?

80 விழுக்காடு பணிநிறைவு பெற்று எந்தப் பிடித்தமும் இல்லாமல் பணி நிறைவு பெற்று சென்றுவிட்டார்கள்.

மாணவர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசுகிறபோது ஆசிரியர்கள் என்பவர்கள், ‘நமக்கு தாயை போன்றவர்கள்’ என்கிறார்கள். மாணவர்கள் கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர். தாங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு ஆசிரியர்களின் மன அழுத்தத்தால் கண்களில் கண்ணீர் வருகிறது.

தேர்தல் வருகிறது!

விளம்பரத்தை தவிர்த்துக் கொண்டு ஆசிரியர் பிரச்சினைகள் மீது அக்கறை காட்டுங்கள்! தீர்வு காணுங்கள்! தீர்வு காணுங்கள்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மீது தனிப்பட்ட முறையில் பற்றுதல் உண்டு!

ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு விளம்பரத்தைத் தவிர, நிர்வாக மாறுதல் அளித்து வருவதைத் தவிர, சுயநிதிப் பள்ளிகள் தொடங்குவதற்கு முனைப்புக் காட்டுவதையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு, ஓரணியில் தமிழ்நாடு – என்ற முதலமைச்சர் அவர்களின் கொள்கை வெற்றிபெற பாடுபடுவோம்!

ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட அமைச்சர் எங்கள் கல்வி அமைச்சர் என்று கருத்தொருமித்து பாராட்டுகிற வகையில் அக்கறை காட்ட வேண்டும், போட்டிக் கூட்டம் நடத்துவதை கைவிட்டு ஆசிரியர்களின் துயர் துடைக்க வேண்டுமென ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை தொிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

1 Comment
  1. Gunalakshmi says

    நன்றி ஐயா, என்னைப் போன்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளக் குமுறல்களை எடுத்துக் கூறியதற்கு, இந்த உலகத்தில் ஏன் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது ஐயா, அந்த அளவுக்கு தினமும் கண்ணீருடன் மன அழுத்த்தில் வாழ்கின்றேன் ஐயா.

Leave A Reply

Your email address will not be published.