ரூ.5 லட்சம் மதிபுள்ள 20 செல்போன்கள் மக்கள் மன்றத்தில் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு !
(19-7-25) புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திருமதி. நித்யா ராதாகிருஷ்ணன் IPS தலைமை வகித்தார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் Dr. S. பாஸ்கரன் PPS மற்றும் காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் இதர காவலர்கள் கலந்து கொண்டனர். 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய புகார் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒருவர் தன்னை சிபிஐ அதிகாரி எனக் கூறி அவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி அதில் ஒரு கோடி ரூபாய் Hawala பணம் வந்துள்ளதாகவும் அதற்காக அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாகவும் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க ரூபாய் 73 லட்சத்தை அனுப்ப வேண்டும் என கூறிய நம்பி புகார்தாரர் இணைவழி மோசடிக்காரர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு 73 லட்சம் பணத்தை அனுப்பி விட்டார். பின்னர் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் அளித்தார்.
அதேபோன்று மற்றொருவர் வாட்ஸ் அப்பில் வந்த பகுதி நேர வேலைவாய்ப்பு என்ற விளம்பரத்தை அவர்கள் தொடர்பு கொண்டு என்ன வேலை என கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் ஹோட்டல்களுக்கு ரேட்டிங்ஸ் கொடுப்பதும், இணையதளத்தில் ரிவியூஸ் கொடுப்பதும் வேலை நின்று கூறியுள்ளார். முதலில் அவர் செய்த வேலைக்கு ரூபாய் 100 முதல் 500 வரை அனுப்பி உள்ளனர். பின்னர் பிரீமியம் டாஸ்க் வேலை உள்ளதாக கூறி அதற்கு ஏழு லட்சம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனை நம்பி புகார்தாரர் ரூபாய் 6,50,000 பணத்தை அனுப்பி உள்ளார். பின்னர் அந்த மோசடிக்காரர்களை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இவர்களின் புகாரை பெற்றுக் கொண்டு உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஆய்வாளர்களுக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் IPS உத்தரவிட்டார்.
மேலும் பொதுமக்கள் தவறவிட்ட 20 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதன் மதிப்பு 5,00,000 லட்சம் ஆகும்.
மேலும் சமீபத்தில் நடைபெறும் இணைய வழி குற்றங்களான
*சமூக வலைதளமான whatsapp டெலிகிராம் குழுக்களில் தெரியாத சில நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம் அவர்கள் அனைவரும் இணைய வழி மோசடிக்காரர்கள்.
* , மும்பை போலீஸ், CBI, TRAI இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு அழைப்புகள் வரலாம். இது இணைய வழி மோசடிக்காரர்கள் உங்களை பயமுறுத்தி பணத்தைப் பறிக்கும் முயற்சி ஆகையால் இதுபோன்று அழைப்புகள் வந்தால் உடனடியாக அந்த அழைப்பை துண்டிக்கவும்.
*சமூக வலைதளங்களில் உடனடி கடன் பெறலாம் என வரும் விளம்பரத்தை நம்பி அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம் அப்படி நீங்கள் கடன் பெற்றால் உங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி உங்களை மிரட்டுவார்கள்
*சமூக வலைதளங்களில் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரத்தை நம்பி யாரும் பணம் முதலீடு செய்ய வேண்டாம்
*பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் whatsapp போன்ற சமூக வலைதளங்களில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரம் ஆன்லைன் டிரேடிங் விளம்பரம் முதலீடு செய்கின்ற பணத்திற்கு இருமடங்காக பணம் தருகிறோம் என்ற விளம்பரங்களை முற்றிலும் நம்ப வேண்டாம்
என்று மக்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் இணைய வழியில் ஏமாறாமல் இருப்பதற்கு சம்பந்தமான விழிப்புணர்வும் மற்றும் அறிவுரையும் கூறினார்.
மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0413-2276144/9489205246 மற்றும் மின்னஞ்சல்:cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க www.cybercrime.gov.in