”விமர்சனம் பண்ணுங்க, விஷமம் கக்காதீங்க” -’பிளாக்மெயில்’ விழாவில் தனஞ்செயன்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஜே.எஸ்.டி.பிலிம் ஃபேக்டரி பேனரில் அமல்ராஜ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படம் ஆகஸ்ட்.01-ஆம் தேதி திரைக்கு வருகிறது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ படங்களை டைரக்ட் பண்ணிய மு.மாறன் டைரக்ட் பண்ணும் ‘பிளாக்மெயில்’ ஹீரோயினாக தேஜு அஸ்வினி நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக பிந்த்மாதவி மற்றும் சந்திரிகா, முத்துக்குமார்  உட்பட பலர் நடித்துள்ளனர்.  படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 19-ஆம் தேதி சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.

இதில் ஹீரோ ஜி.வி.பி., டைரக்டர் மாறன், ஹீரோயின் தேஜு அஸ்வினி, பிந்துமாதவி, சந்திரிகா,  மியூசிக் டைரக்டர் சாம் சி.எஸ். , கவிஞர் கார்த்திக் நேத்தா ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கதிரேசன், ட்ரீம் வாரியர்ஸ் குகன், சதீஷ், டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார்,வசந்தபாலன் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sri Kumaran Mini HAll Trichy

டைரக்டர் மாறன்
டைரக்டர் மாறன்

படத்தின் தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசும் போது,

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“இந்தப் படத்தின் கடைசி எட்டு நாட்கள் ஷூட்டிங் முடிவதற்கு சிக்கல் வந்ததிலிருந்து இப்போது ரிலீஸ் வரை பெரும் உதவியாக இருந்தவர் ஜி.வி.பிரகாஷ் சார் தான். பேசிய சம்பளத்தில் பாதி தான் வாங்கினார். அவரின் பேருபகாரம் தான் எல்லாவற்றிற்கும் காரணம். ஜி.வி.பிக்கு என்றென்றும் நன்றி.”

தனஞ்செயன்,

”பேசிய சம்பளத்தில் பாதியைத் தான் ஜி.வி.பி.வாங்கியுள்ளார் என்பது பெருமையான விசயம். தயாரிப்பாளர் மீது மிகுந்த அக்கறை உள்ள ஹீரோ அவர். அப்புறம் இன்னொரு முக்கியமான சங்கதி, படம் ரிலீசாகி மூணு நாளைக்கு விமர்சனம் பண்ணாதீங்கன்னு மீடியாவிடம் சொன்னார் விஷால். அதில் எனக்கு உடன்பாடில்லை. மூணு நாளு விமர்சனம் வரலேன்னா, படம் வந்ததே யாருக்கும் தெரியாது. கண்டிப்பாக விமர்சனம் பண்ணுங்க, தயவு செஞ்சு விஷமம் கக்காதீங்க” என்றார்.

Flats in Trichy for Sale

தனஞ்செயன்,
தனஞ்செயன்,

தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களின் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தெரிந்து உதவி செய்வார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரைப் போலத்தான் இப்போது ஜி.வி.பிரகாஷும்” என்றார் தயாரிப்பாளர் கதிரேசன்.

தயாரிப்பாளர் அமல்ராஜுக்கும் தனக்கும் பெரும் ஆதரவாக இருந்த ஜி.வி.பிரகாஷுக்கும் படத்தில் பங்கு பெற்ற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கும் தனது நன்றியைச் சொல்லி சுருக்கமாக பேசினார் டைரக்டர் மாறன்.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

ஹீரோ ஜி.வி.பிரகாஷ்,

“நல்ல கதை நிச்சயம் வெற்றி பெறும். இந்த பிளாக்மெயிலும் அந்த வகையில் சேரும். தயாரிப்பாளர் அமல்ராஜுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்”.

 

—    மதுரை மாறன்  

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.