காத்திருக்க சொன்ன பெண் வரவேற்பாளரை தாக்கிய கொடூர சம்பவம்!
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது, இந்த மருத்துவனைக்கு தினம்தோறும் பல நோயாளிகள் சிகிச்சைக்காக வருவது வழக்கம், இந்த நிலையில் கல்யாண் பகுதியைச் சேர்ந்த கோபால் ஜா என்பர் தனது குடும்பத்தினருடன் சிகிச்சைக்காக மருத்துவமனக்கு வந்திருக்கிறார்.
அப்போது குடும்பத்தில் இருந்த ஒருவர் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும் என வரவேற்பாளரிடம் கேட்டிருக்கிறார். அப்போது அந்தப் பெண் எழுந்து நின்று, மருத்துவர் மற்றொரு நோயாளியை பார்த்து கொண்டிருக்கிறார். அதனால் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியிருக்கிறார்.
அதை கேட்டு கோபமடைந்த கோபால் ஜா ஓடிச்சென்று வரவேற்பாளர் பெண்னை காலால் உதைத்து தலைமுடியை இழுத்து தரையில் தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளார். அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் செவிலியர்கள் தடுத்தும் பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் கொடுத்த வாக்குமூலத்தில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மன்பாடா காவல் துறையினர்.
அங்கிருந்து தப்பி ஓடிய கோபால் ஜாவை தேடி வருவதாகவும் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
– மு. குபேரன்