“சூப்பர் ஸ்டார் படம் போல சூழலை உருவாக்கும்” – ‘கிங்டம்’ குறித்து விஜய் தேவராகொண்டா!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்” படம் ஜூலை 31-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா ஜூலை 29-ஆம் தேதி சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

“என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி வெளியாவதால் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்.

Srirangam MLA palaniyandi birthday

இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற வரவேற்பை நினைவூட்டினார். ஆரம்பத்திலிருந்தே, இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.இது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை பகிர்கின்றன.

இந்தப் படம்  உணர்வுகளும் அதிரடியும் கலந்த ஒன்று.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் படங்களை போலவே ஒரு சூழலை உருவாக்கும். ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் படத்திற்கான புரமோஷன்கள் நடந்தாலும், தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே நான் வந்து புரமோட் செய்வதென்றால், அது சென்னை மட்டுமே! எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும் .

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கணும்… இல்லன்னா பரவாயில்லை” என்று சூர்யா அண்ணனிடம் தயங்கி கேட்டேன். ஆனால் அவர் எந்த தயக்கமுமின்றி டீசருக்காக தனது சக்திவாய்ந்த குரலை கொடுத்து உதவினார். அதனால் கிங்டத்தின் தாக்கம் வெளியே வருவதற்கு முன்பே உருவானது.

'கிங்டம்'அனிருத் இந்த படத்தின் இசையில் தனது உயிரையும் மனதையும் ஊற்றியுள்ளார். நேற்று ப்ரீ-ரிலீஸ் இவெண்டில் இசை நிகழ்ச்சி நடத்தியவர், இன்று சென்னை வந்து படம் ஓவர்சீஸ் காப்பிக்காக இறுதிப் பணிகளை பார்வையிடுகிறார்.நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்.

படம் முழுவதும் வித்தியாசமான சினிமாட்டோகிராபி இருக்கு. கிரீஷ் கங்காதரன் படத்தில் 40% வேலை செய்தார். பின் அவர் ‘கூலி’ படத்துக்காக சென்றுவிட்டார். மீதியை ஜோமோன் எடுத்துள்ளார்.

இந்த கதாபாத்திரத்துக்காக நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஒரு மாற்றத்துக்காக தலையில் இருந்து மொத்த முடியையும் வலித்து எடுத்தேன். ஆரம்பத்தில் ஒரு கான்ஸ்டபிளாக கதையில் வருகிறேன். பின்னர் பெரிய மாற்றம்.

நான் ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது, ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் என்னை ஒரு குடும்ப உறவினராகவே பார்க்கிறீர்கள். இது எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியைத் தருகிறது.” என உணர்வுப்பூர்வமாக பேசினார்.

தொழில் நுட்பக் குழு:

இசை: அனிருத்

ஒளிப்பதிவாளர்கள்: ஜோமோன் டி  ஜான் ISC & கிரீஷ் கங்காதரன் ISC

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

எடிட்டிங்: நவீன் நூலி

தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவிநாஷ் கொல்லா

ஆடை வடிவமைப்பாளர்: நீரஜா கோனா

பாடல் வரிகள்: சூப்பர் சுப்பு & விஷ்ணு எடவன்

வசனங்கள்: கே.என். விஜயகுமார்

நடன இயக்குநர்: விஜய் பின்னி

ஸ்டண்ட் இயக்குனர்: யானிக் பென், சேதன் டி’சோசா & ரியல் சதீஷ்

கலர் கிரேடிங்: ரங்கா

ஒலி வடிவமைப்பு: Sync சினிமா

ஆடியோகிராபி: விநய் ஸ்ரீதர்

VFX மேற்பார்வையாளர்: வசுதேவ ராவ்

பி‌ஆர்ஓ : சுரேஷ் சந்திரா &  அப்துல் நாசர்

 

—   மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.