ஜாதிய பாகுபாடு பார்க்கும் அமைச்சரின் மருமகன் ! பேரூராட்சி துணைத்தலைவர் தர்ணா !

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியின் சேர்மனாக பதவி வகிப்பவர் முகமது அப்துல் காசிம். அவர் திமுக அமைச்சர் ஆவடி நாசரின் மருமகன். இதே பேரூராட்சியில் துணைத் தலைவராக உள்ள சந்திரனை ஜாதி பாகுபாடு காட்டுவதாக கூறி பேரூராட்சி கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தமபாளையம் பாளையம் பேரூராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம் தலைமையில் பேரூராட்சி கூட்டம் இன்று (ஜூலை-31)  நடைபெற்றது. அப்போது பேரூராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் சந்திரன் தன்னை ஜாதிய பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகக் கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சாதிய பாகுபாடுகுறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உத்தமபாளையம் பேரூராட்சியில் துணை தலைவர் பக்கத்தில் அமர வைக்காமல் ஜாதிய பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும், வரவு-செலவு உள்ளிட்ட இதர பணிகளுக்கு அழைப்பது கிடையாது.

இன்று திமுக அமைச்சர் நாசர் மருமகன் உத்தமபாளையம் பேரூராட்சி சேர்மன் ஜாதிய பாகுபாட்டுடன் நடத்துவதாக கூறி துணைத் தலைவர் சந்திரன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

  —   ஜெய்ஸ்ரீராம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.