டபுள் மீனிங் வசனமும் குத்துப் பாட்டுகளும் இல்லாத படங்கள் “சரண்டர்” ஆகலாமா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

”நம்ம திருச்சியை சேர்ந்தவர்தான் இந்த படத்தை தயாரிச்சிருக்காரு. இயக்குநரும் திருச்சிதான். படம் நல்லாயிருக்குனு சொல்றாங்க. வாரீங்களானு” கேட்டார் நண்பர். நானும் அரை மனதோடு கிளம்பினேன். நீண்ட வருடங்களுக்குப்பிறகு, மனநிறைவான திரைப்படம் ஒன்றை பார்த்த திருப்தியை தந்தது ”சரண்டர்”.

சினிமாவுக்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு சினிமா பற்றிய ஞானம் கொண்டவன் அல்ல. ஒரு ரசிகனாய் பார்வையாளர் மாடத்திலிருந்து பதிவு செய்கிறேன்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

”இந்த படத்துல பாட்டே இல்லைதானே?” இதுதான், படம் முடிந்தவுடன் நண்பரிடம் நான் எழுப்பிய முதல் கேள்வி. அந்த அளவுக்கு வேறு எதையும் பற்றி யோசிக்க விடாத விறுவிறுப்பான காட்சிகளால் நகர்கிறது. இடைவேளையில் கிடைத்த பத்து நிமிடங்கள் கூட, “யாரு ப்ரோ டைரக்டர். இதுக்கு முன்னாடி என்ன படம் பன்னியிருக்காரு? யாருகிட்ட அசிஸ்டெண்டா இருந்தாரு? இந்த டீம்ல இருக்கிறவங்கெல்லாம் யாரு?” என்ற கேள்விகளாகவே போனது.

இயக்குநர் கௌதமன் கணபதி
இயக்குநர் கௌதமன் கணபதி

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சுமார் இரண்டரை மணி நேரம் இருக்கைகளுக்கிடையில் பார்வையாளனை கட்டிப்போடும் மாய வித்தையை கற்றுத்தேர்ந்த அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி. எந்த இடத்திலும், நானும் இருக்கிறேன் என்பதாக காட்டிக் கொள்ளாத விகாஸ் படிசாவின் பின்னணி இசை. எனக்கென்னவோ, சிசிடிவி காமிராவுக்குப் பதிலாக தரமான கேமிரா ஒன்றை போலீஸ் ஸ்டேஷனில் பொருத்திவிட்டு அங்கு நான்கு நாட்கள் நடந்த சம்பவத்தை வெட்டிக் கோர்த்தது போல்தான் தோன்றியது, மொத்தப்படமும். கலை இயக்குநர் ஆர்.கே. மனோஜ் குமாரின் திறமையும்; கதாப்பாத்திரங்களின் தேர்வும்; கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டிய நடிகர்களின் அர்ப்பணிப்பும் பிரமிப்பூட்டுகின்றன. ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் கையாண்டிருக்கும் ஒளி அமைப்பு உத்தி அவ்வளவு யதார்த்தம். லாஜிக் மீறாத, சண்டைக் காட்சிகள். படத்தொகுப்பாளர் ரேணு கோபாலின் கைவண்ணம் என இவை அத்தனையும், ”செம்ம டீம்” என்பதாக புருவம் உயர வைக்கிறது.

”டிவிஸ்ட்” இல்லாமல் எந்த படங்களும் இல்லை. அதுவும், கிளைமேக்ஸில்தான் பெரும்பாலும் அந்த டிவிஸ்டும்கூட இருக்கும். ஆனால், சரண்டர் படத்தின் சிறப்பம்சமே, டிவிஸ்டுக்குள் டிவிஸ்ட்தான். டைட்டில் கார்டு தொடங்கி, எண்டு கார்டு வரையில், அத்தனை டிவிஸ்ட்கள். புகழேந்தியின் தந்தை பெயரும் பெரியசாமிதான் … வில்லன்கள் கடத்திய பெண்தான் வீட்டில் பார்த்திருந்த மணப்பெண் … என படம் முடியப்போகுதுனு தெரியிற நேரத்துலயும், அப்படி ஒரு டிவிஸ்ட். குறிப்பாக, துப்பாக்கியை எடுத்தது அந்த லாரி டிரைவர்தான் என்பதாக பார்வையாளனை நம்ப வைத்து, படத்தின் ஹீரோவோடு நம்மையும் துப்பாக்கியைத் தேடி ஓட வைத்து, கடைசியில் துப்பாக்கியை எடுத்தது யார் என்ற முடிச்சியை அவிழ்க்கும் வரையில் அத்தனை டிவிஸ்ட்டுகள். சும்மா, பின்னி பிடலெடுத்திருக்கிறார், அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி.

சரண்டர்’அரசியல்வாதிகளுக்கும் போலீசு உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பை மையப்படுத்திதான் மொத்தக் கதையும் நகர்கிறது. அதுவும் வெறும் ஐந்து நாட்களில் நடந்த சம்பவங்களை இவ்வளவு விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லிய விதமே இயக்குநரின் முத்திரையாக பதிகிறது.

படத்தின் ஹீரோ டிரெய்னிங் இன்ஸ்பெக்டர் புகழேந்திதான் என்றாலும், என்னை பொறுத்தமட்டில் ரைட்டர் பெரியசாமிதான் படத்தின் பெரிய பலம். அவர்தான் மொத்த படத்தின் கதாநாயகன். இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் தர்ஷனும் லாலும் போட்டி போட்டுக்கொண்டு பெர்ஃபாமென்ஸ் காட்டியிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளுக்கும் போலீசு உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான அந்த உறவை அவ்வளவு நுட்பமாக பதிவு செய்திருக்கிறார், இயக்குநர். இந்த இடத்தில், போலீசை எதிர்மறையாக காட்சிப்படுத்தியிருந்தாலும், ரைட்டர் பெரியசாமி, இன்ஸ்பெக்டர் சடையாண்டி கதாபாத்திரங்களின் வழியே, போலீசாரின் மற்றொரு உலகத்தை காட்டியிருக்கிறார். கருப்பு – வெள்ளை என்பதாக, இந்த விவகாரத்தை வெறுமனே தட்டையாக அணுகாமல், போலீசாரின் க்ரே ஏரியாவை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார், இயக்குநர்.

சரண்டர்ஒரு போலீஸ் ஸ்டேஷனில் எத்தனை இன்ஸ்பெக்டர்கள் மாறினாலும், ரைட்டர்கள் பெரும்பாலும் மாற்றப்படுவதில்லை. மொத்த ஸ்டேஷன் கன்ட்ரோலும் அவரிடம்தான் இருக்கும். கொடுக்கல் – வாங்கல் விவகாரங்களை கையாளும் நபராகவும் அவராகவே இருப்பார் என்பதுதான் யதார்த்தம். இந்த யதார்த்தத்திலிருந்து மாறுபட்ட, நேர்மையான போலீசாக ரைட்டராக பெரியசாமி படும் பாடுகளை நுட்பமாக கையாண்டிருக்கிறார்.

போலீசு நிலையங்களுக்கு சென்று வந்த அனுபவம் கொண்டவர்களுக்கு இந்த கதாபாத்திரங்கள் நிச்சயம் பல போலீசாரை நினைவுபடுத்தும். பெரியசாமியை போல, இன்ஸ்பெக்டர் சடையாண்டியை போல, லேடி எஸ்.ஐ. போல, வில்லன்களோடு நெருக்கம் பாராட்டும் ஏ.சி.யை போல நிஜத்திலும் அத்தகைய போலீசார்களை பார்த்திருப்பார்கள்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

ட்ரையினிங் எஸ்.ஐ. புகழேந்திக்கும், ரைட்டர் பெரியசாமிக்கும் டார்ச்சர் கொடுக்கும் அந்த லேடி எஸ்.ஐ. கதாபாத்திரங்கள் ஒவ்வொரு போலீசு நிலையத்திலும் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு மோசடி வழக்கு ஒன்றில், மோசடி கும்பலுக்கு ஆதரவாக பணத்தை வாங்கிக்கொண்டு ஏ.சி. ஒருவர் அந்த  விவகாரத்தை அனுகிய விவகாரத்தை சொந்த அனுபவத்தில் எதிர்கொண்டிருக்கிறேன். கடற்கரையோர ரிசார்ட்டுகளில் நிஜ வில்லன்களோடு நிஜ போலீசார் ஒன்றாக சேர்ந்து தண்ணியடித்துக்கொண்டே டீலிங்குகள் பேசிய விவகாரங்கள் தமிழகம் அறியாததல்ல.

பொதுவில் போலீசு என்றாலே, இப்படித்தான் என்று ஹீரோ போலவோ அல்லது வில்லன் போலவோ பொதுமைப்படுத்திச் செல்லாமல், ரைட்டர் பெரியசாமி, எஸ்.ஐ. புகழேந்தி, இன்ஸ்பெக்டர் சடையாண்டி போன்ற போலீசார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதுதான், இதில் கோடிட்டு சொல்ல வேண்டிய விசயம். அத்தகைய மனநிலையில், உயர் அதிகாரிகளின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மன அழுத்தத்துடனே பணியாற்றும் போலீசார்களுக்கான சரியான அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது, சரண்டர்.

வீடியோ லிங்..

போலீசார்களும் சராசரி மனிதர்கள்தான். அவர்களுக்கும் பந்த பாசம் இருக்கத்தான் செய்யும் என்பதை அப்பா செண்டிமென்ட்டில் நெகிழ வைக்கிறார். ”குடிச்சிட்டு பேசுறேனு நினைக்காத … நல்லவனா இருந்தா போதாது வல்லவனா இருக்கணும். சூது இருந்தா தான் உன்னைச் சுத்தி நடக்கும் ஆட்டத்தைச் சமாளிக்க முடியும்”னு ரைட்டர் பெரியசாமி பேசும் டயலாக் நடைமுறை யதார்த்தம். சடையாண்டி போல ஒவ்வொரு இன்ஸ்பெக்டர்களும் இருந்துவிட்டால், போலீசு துறையில் மாபெரும் மாற்றத்தையே கண்டுவிடலாம் என்ற ஏக்கத்தை பார்வையாளனுக்கு கடத்தியிருக்கிறது.

“நம்ம மேல பயம் இருக்கனும். அதுவரைக்கும்தான் நம்ம பலம். பயம் போச்சுன்னா ஒன்னும் இல்லை” னு பேசுற டயலாக்கும் சரி, அதுக்காக மெனக்கெடறதும்னு வில்லன்கள் ஏரியாவையும் ஸ்கோர் செய்திருக்கிறார், இயக்குநர். தாஸ், வர்கீஸ் போன்ற கதாபாத்திரங்களின் வழியே, துரோகத்தின் பல்வேறு பரிமாணங்களை காட்சிப்படுத்திய விதமும்; வில்லனின் தம்பி கதாபாத்திரமும், அவ்வளவு யதார்த்தமானவை. ஏதோ ஒரு விதத்தில் அதுபோன்ற ”மேலிடத்து கிராக்கு”களின் சீண்டல்களை தன் பணி அனுபவத்தில் எதிர்கொள்ளாத போலீசார் இருக்க வாய்ப்பில்லை.  இதுபோன்று, உண்மைக்கு மிக நெருக்கமான காட்சியமைப்புகளின் வழியே, நம் மனதுக்கு மிக நெருக்கமாகிவிடுகிறார், அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி.

பாவப்பட்ட பெண்ணாக சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் செம்மலர் அன்னமும் அவளது ஐந்து வயது மகனும், அந்த ஸ்டேஷனில் டீ கொடுக்கும் இஸ்லாமிய முதியவரும் நெஞ்சோடு அப்பிக்கொள்கிறார்கள்.

சரண்டர்மொத்தத்தில், அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதிக்கு இணையாக, எல்லோருமே போட்டி போட்டுக் கொண்டு தங்களது ஏரியாவில் அசத்தியிருக்கிறார்கள். சரண்டர் படக்குழுவில் ஆர்ட்டிஸ்டுகள் தொடங்கி, படப்பெட்டி வெளியானது வரையில் பயணித்த அத்துனை பேரின் கூட்டு உழைப்பின் ஆகச்சிறந்த படைப்பாக வெளிவந்திருக்கிறது, சரண்டர்.

இரட்டை அர்த்த வசனக் காட்சிகள் இல்லாமல், அரைகுறை ஆடையோடு குத்துப்பாட்டு இல்லாமல், ஏன் மருந்துக்கு ஒரு பாட்டுக் கூட இல்லாமல், ஹீரோயின் இருக்கிற இடமே தெரியாமல் … இப்படியாக கமர்ஷியல் படங்கள் என்பதற்கு இலக்கணமாக சொல்லப்படும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் “இல்லாமல்” அறிமுக இயக்குநரை நம்பி, படத்தின் கதையை நம்பி, படத்தை எடுக்க முன்வந்த தயாரிப்பாளரின் மன உறுதி நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

கௌதமன் கணபதி போலவே, நல்ல கதையோடு காத்திருக்கும் அறிமுக இயக்குநர்களுக்கும் அவர்களின் புதிய முயற்சிகளுக்கும்  கை கொடுக்கத் தவறும்போதுதான், மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்ற சப்பை கட்டுகளோடு ”கமர்ஷியல் சினிமா” என்ற பார்முலாவுக்குள் ”சரண்டர்” ஆகி சீரழிகிறது, தமிழ் சினிமா.

 

  –   இளங்கதிர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.