130 லிட்டர் சாராய ஊறல்கள்..! சல்லடை போட்ட போலீஸ்…?
திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜவ்வாது மலைப் பகுதிகளில் நடத்தப்பட்ட சாராய வேட்டையில் 130 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன.
அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட பரந்து விரிந்திருக்கும் ” ஜவ்வாது மலை தொடரில் “திருப்பத்தூர்’ மாவட்டத்திற்குட்பட்ட . புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லி வாசல் நாடு, பஞ்சாயத்துகளில் பார்வைக்கே அகப்படாத 34 கிராமங்கள் உள்ளடைக்கிள்ளன, அதில் சாரயத்திற்கு பேர் போன குறிப்பிட்ட சில பகுதிகளில் சாராய மாஃபியாக்களின் தனி ராஜ்ஜியத்தில் சிக்குண்டு கிடக்கும் பகுதிகள் தான் (புதூர் நாடு) வடுதலம்பட்டு , நடு குப்பம் , கீழூர் , (நெல்லி வாசல் நாடு) நெல்லிப்பட்டு . சேம்பறை . புலியூர் , மேல்பட்டு . (புங்கம்பட்டுநாடு) தகரகுப்பம் , நடுவூர் . கம்புகுடி நாடு . சின்னவட்டானூர், சேர்காணூர் . கிளானூர் . பேளூர் . உள்ளிட்ட கிராமங்களில், திரும்பிய பக்கமெல்லாம் புகையும் அடுப்புகளும், ஊறல் பேரல்களும் காணப்படுகின்றன.

இந்த மலைப் பகுதிகளில், ஒவ்வொரு முறையும் போலீஸார் ரெய்டுக்குச் செல்லும்போது நூற்க்கணக்கான லிட்டர் சாராய பேரல்களை அழித்து வருகிறார்கள். ஆனாலும், சாராய மாஃபியாக்களை, கட்டுப்படுத்தவோ அவர்களை பிடிக்கவோ முடியாமல் போவது ஆச்சரியமான உண்மை
இப்பகுதியில் வெளியாட்கள் யாரும் அவ்வளவு எளிதாக ஊடுருவவோ, கண்காணிக்கவோ முடியாத அளவுக்கு மலையை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது “சாராய மாஃபியா கும்பல்.
‘போலீஸார்கள். மலைப் பகுதியின் எந்த மூலையிலிருந்து ஏறினாலும், உடனே சாராயக் கும்பல்களிக்கிடையே எச்சரிக்கை ‘ சத்தம் ‘ பறக்கும். அந்த சத்தம் வரும் திசையை நோக்கி போலீசார்கள் வருவதற்குள் அடுத்த நொடியே ஒட்டுமொத்த சாரய கும்பலும் தப்பி ஓடி விடுகிறது
ஒவ்வொரு முறையும் ரெய்டுக்குச் செல்லும் போலீஸார், ஆயிரக்கணக்கான லிட்டர் சாராய பேரல்களை உடைத்து கீழே கொட்டி அழித்துவிட்டு வருகிறார்கள். ஆனாலும், சாராய மாஃபியாவிடமிருந்து ஜவ்வாது மலையை மீட்க முடியவில்லை
இந்த நிலையில், கடந்த வாரம் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்ட “சியமளா தேவி’ மேற்பார்வையில், 15 காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, சாராய மாஃபியாக்களின் கட்டுப்பாட்டிலுள்ள “புதூர் நாடு ,பகுதியில் உள்ள மலை கிராமங்களில் ‘ஜூலை 27 ந்தேதி, அதிரடியாக சாராய வேட்டை நடத்தப்பட்டது. அதில் . 130 லிட்டர் சாராயம் . அவற்றை வடிக்கட்ட பயன்படுத்தப்படும் பேரல்கள், அடுப்புகளைக் கண்டுபிடித்து அடித்து நொறுக்கி அழித்துவிட்டு சென்றிருக்கிறார்கள் ,
சாராயவேட்டைக் குறித்து புதூர் நாடு மலைவாழ் மக்களிடம் பேசினோம் ….
எல்லா அரசியல் கட்சிகளின் ஆதரவோடு சாரய மாஃபியாக்கள் எங்கள் பகுதியில் உள்ள அடர்ந்த வனத்திற்குள் புகுந்து சாரய ஆலையை அமைக்கின்றனர், இதுகுறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் , இங்கு காய்ச்சப்படும் சாராயம் 100 ml முதல் . 1/2 லிட்டர், 1 லிட்டர் வரை பாக்கெட்டில் அடைத்து ஆம்பூர் , கிருஷ்ணகிரி . சென்னை வரை கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது
குறிப்பாக ,கொடைங்கினிமலை ( பட்டிமெது) “சாராயம்னா படு ஃபேமஸ் குடிமகன்கள் விரும்பி அருந்தும் இந்த சாராயம் ஒரு பெக்கில் ஜிவ்வுன்னு போதை ஏறுவதாக அவர்களால் நம்பப்படுகிறது. ஏதோ ஒரு லிக்யூடு பயன்படுத்தி 10 லிட்டர் தண்ணிரில் 2 சொட்டு கலந்து கொடுக்கிறார்களாம் , அந்த வகை சாராயத்தை குடித்து சமிபத்தில் இதோ அந்த உச்சி முகட்டில் உள்ள “வடுதலம்பட்டு. கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் இறந்துபோனார் . 13 வயது பையன்கள் தான் அதிகம் குடிக்கிறாங்க அந்த ஆலை கிழே உள்ள குரிசிலாபட்டை சார்ந்த சாராய மாஃபியாக்களால் நடத்தப்படுகிறது
அதேபோல் சின்னவட்டானூர். சேர்காணூர் . கிளானூர். பேளூர் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் ( மலைவாழ் மக்கள் அல்லாத ) சில உள்ளூர் புள்ளூருவிகள் துணையுடன் வெளிப்படையாக சாராயம் காய்ச்சுகிறார்கள் இதனை திருப்பத்தூர் கிராமிய போலீஸார்கள் கண்டுக் கொள்வதேயில்லை .
புதியதாக வந்த எஸ்பி மேடம் ஒரு இடத்தில் மட்டும் ரெய்டு நடத்தி சாராயத்தை அழித்துவிட்டு போனார்கள் . அதனை காய்ச்சியவர்கள் கைது செய்யப்படவில்லை . மற்ற இடங்களில் ரெய்டு நடத்தாமல் சென்ற மர்மம் என்னவோ என ஆதங்கப்பட்டனர்.
— மணிகண்டன்