மதுரையில் மீண்டும் பிடிபட்ட ஹவாலா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை ரயில் நிலையத்தில் பிடிப்பட்ட  ரூ.75,600,00/- மதிப்புள்ள சட்டவிரோத பணம், ரூ.4122898/- மதிப்புள்ள 450.59 கிராம் தங்கம் மற்றும் ரூ.3073/- மதிப்புள்ள 26.730 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது, மொத்தம் ரூ.11685971/- .

மதுரை ரயில் நிலைய நடைமேடை எண்.1 இல் உள்ள பார்சல் அலுவலகம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு இளம் ஆண் பயணிகளை ஸ்ரீ.சி.ராமகிருஷ்ணன், ASI/RPF@CPDS/மதுரை மற்றும் ஸ்ரீ.வேல்முருகன், HC/RPF @CPDS/MDU ஆகியோர் கவனித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களை மதுரையில் உள்ள RPF நிலையத்தில் ஆய்வாளர்கள் அஜித்குமார் மற்றும் சாபூ ஜெக்கப் ஆகியோர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மீண்டும் பிடிபட்ட ஹவாலாமுதல் பயணி தனது பெயர் மற்றும் முகவரியை தன்மய் ஹரிதாஸ் சலுங்கே, வயது 21, S/O ஸ்ரீ. ஹரிதாஸ்பரே கிராமம், சங்கிலி (டிடி), மகாராஷ்டிரா, தற்போது கோவில்பட்டி, ராயல் கோல்ட், தெற்கு பஜாரில் வசிக்கிறார் என்று தெரிவித்தார். பையில் ரூ.500 மதிப்புள்ள இந்திய நாணயத்தாள்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.  மதுரை வருமான வரி துணை இயக்குநருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மீண்டும் பிடிபட்ட ஹவாலாமேலும் அவர் மதுரை வருமான வரித்துறை குழுவினருடன் மதுரை RPF போஸ்டுக்கு வந்தார். நாணயத்தாள்கள் அடங்கிய நீல நிறப் பையை வருமான வரி அதிகாரிகள் முன்னிலையில் சரிபார்த்து எண்ணினர், பையில் 14400 எண்கள் ரூ.500 நாணயத்தாள்கள் இருந்தன, மொத்தம் ரூ.72,00000/- (எழுபத்திரண்டு லட்சம் மட்டும்). மேற்கூறிய நாணயத்தாள்கள் மற்றும் கேரியரின் நீல நிறப் பை மற்றும் மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மீண்டும் பிடிபட்ட ஹவாலாஇரண்டாவது இளம் பயணி தனது பெயர் மற்றும் முகவரியை டி.சந்தனராஜ், வயது 29, தங்கமாரியப்பன், 177/A-8, 3வது செக்கடி தெரு, கோவில்பட்டி என தெரிவித்தார். வருமான வரி அதிகாரிகள் முன்னிலையில் அவரது வசம் இருந்த கருப்பு நிற பையை சோதனை செய்ததில், அதில் ரூ.360000/- மதிப்புள்ள 720 ரூ.500 ரூபாய் நோட்டுகள், ரூ.4122898 மதிப்புள்ள 450.59 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.3073/- மதிப்புள்ள 26.730 கிராம் வெள்ளி நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேற்கண்ட பொருட்கள் மற்றும் மொபைல் போன் பறிமுதல்  செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும், மொத்தம் ரூ.11685971/- மதிப்புள்ளவை வருமான வரி துணை இயக்குநர் விசாரணை மற்றும் குழுவினரிடம் மேலும் தேவையான நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன.

 

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.