இவர்களைப் போன்றவர்கள் இன்னும் பாஜக-வில் இருக்கிறார்களா ?
திருச்சிக்கு வந்த பிரதமரை சந்தித்த சார்லஸ் .
யார் இந்த சார்லஸ் என கேட்கலாம்..?
பணி :கார் எலக்டிரிசயன் ..
வீடு: திருச்சி அரியமங்கலம் அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி பணியாற்றும் மிக மூத்த நிர்வாகி .
கட்சியின் கிளை தலைவராக தொடங்கி , வார்டு தலைவராக பணி பின் விவசாய அணி மாவட்ட தலைவராகவும் சிறுபான்மை பிரிவின் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து தற்போது சிறு பான்மை பிரிவின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளில் கட்சி நடத்தும் அனைத்து போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திலும் கலந்து கொண்டு கட்சிக்காக சிறையும் சென்றவர்.
அன்றே இவரது பணியை கண்டு ரங்கராஜன் குமாரமங்கலம் இவரது வீடு தேடி இரு முறை வந்திருக்கிறார். என்ன வேணும் கேளுங்க என்ற போது இவர் கேட்டது என்ன தெரியுமா?
கிறித்தவராக இருந்து கொண்டு தனக்கென எதுவும் கேட்காமல், எங்க ஏரியா மாரியம்மன் கோவில் சீரமைக்கனும் சாலை வசதி குடிநீர் வசதி வேண்டும் என கேட்ட உடன் அன்றே 30 லட்ச ரூபாய் செலவில் செய்து தந்தவர் ரங்கராஜன் குமாரமங்கலம்.
கறபனை செய்து பாருங்க. இன்றே மதவாத கட்சி பாஜக என பொய் பிரச்சாரம் கொடி கட்டி பறக்கும் போது 25 ஆண்டுகளுக்கு முன்பு சிறுபான்மை சமுதாயத்தில் இருந்து கொண்டு தீவிரமாக கட்சி வேலை பார்த்திருக்கிறார் என்பது சாதரண விஷயம் இல்லை.
கட்சி பணிகள் அனைத்துக்கும் அன்று முதல் இன்று வரை முன் நிற்பவர் இந்த வின்சென்ட் சார்லஸ். இதன் பலன் என்ன தெரியுமா.?
கிறிஸ்தவரான இவர் எப்படி பாஜகவில் சேரலாம் என உறவுகள் நண்பர்கள் உட்பட இவரது சொந்தங்கள் இவரை இன்று வரை ஒதுக்கியே வைத்துள்ளனர்.
அவங்க ஒதுக்கலாம் ஆனால் பாஜக ஒதுக்குமா என்ன..?
இதோ பாருங்கள் பிரதமரே!
இவரும் நமது கார்யகார்த்தா..
நமது சகோதரர்களில் ஒருவர்
என பிரதமர் முன் நிறுத்தியுள்ளது பாரதிய ஜனதா கட்சி.
பெரிய வசதியானவர் இல்லை. அரசியல் பின்புல குடும்பமும் இல்லை. மாற்று மதம் பிறகு ஏன் இன்னும் இந்த கட்சி என்றால் பாரதிய ஜனதா எனக்கு அடையாளம் என்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியால் அவருக்கு பெருமை என்பதை விட இவர்களை போன்றவர்களால் தான் பெருமையடைகிறது பாரதிய ஜனதா கட்சி…