300 மதுபாட்டில்கள் பறிமுதல்! கடத்தல் இளைஞா்களை கைது செய்த காவல்துறை!
கும்பகோணம் அருகே புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 300 மதுபாட்டில்கள் பறிமுதல். மது பாட்டிலை கடத்திய மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை .
திருவிடைமருதூர் தாலுக்கா ஆடுதுறை அருகே உள்ள சாத்தனூரில் திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காருக்குள் இருந்த அட்டைப் பெட்டிகளை பார்த்தபோது அதில் 300 புதுச்சேரி மாநிலம் மது பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் அம்பகரத்தூர் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் (22), மாரியப்பன்( 22), கார்த்தி(34) என்பதும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி விற்பனைக்காக காரில் கடத்தி செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தொிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த திருநீலக்குடி போலீசார் அவர்களிடம் இருந்த 300 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.