சத்தீஸ்கரில் புதிய சிம் வாங்கியவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்களால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேல் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்காக ஒருவருக்கு கால் செய்து நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசுகிறேன் என்று கூறுவார். அதற்கு மறுமுனையில் பதில் அளித்தவர் நான் சதுர செயலாளர் சந்து முருகன் பேசுகிறேன் என்று நக்கலாக பதிலளித்திருப்பார். இது அத்திரைப்படத்தில் நகைச்சுவைக்காக வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இது போன்ற ஒரு சம்பவம் உண்மையிலேயே ஆர்.சி.பி அணியின் முக்கிய வீரருக்கு நடந்திருப்பது இணையவாசிகளிடம் பெறும் கேலியும், கிண்டலும் ஏற்பட்டிருக்கிறது.

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மளிகை கடைக்காரரான மனிஷ், இவர் வாங்கிய புதிய செல்போனுக்கு அருகில் உள்ள ஒரு கடையில் புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய அந்த எண்ணை புதிய போனில் போட்டு வாட்ஸ்அப்பை ஆக்டிவேட் செய்தபோது, அதில் கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் புகைப்படம் வந்திருக்கிறது. முதலில் அது இந்த நம்பரின் பழைய உரிமையாளர் வைத்திருப்பார் என்று பெரிதாகக் கண்டுகொள்ளாத அவர், பின்னர் வந்த அழைப்புகளைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். ஆம், அந்த எண்ணுக்கு விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் அழைத்துள்ளனர். ஆனால் ஆரம்பத்தில் இது என்னை யாரோ பிராங்க் செய்ய நினைக்கிறார்கள் என்று பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

ரஜத் படிதார்
ரஜத் படிதார்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இந்த நிலையில் தான் இந்த போன் நம்பரின் உண்மையான சொந்தக்காரரான ஆர்.சி.பி கேப்டன்  ரஜத் படிதார் மற்றொரு நம்பரில் இருந்து மனிஷ்சை நேரடியாக தொடர்பு கொண்டிருக்கிறார். அதில், “சகோதரா, நான் ரஜத் படிதார் பேசுகிறேன். அந்த எண் என்னுடையது, தயவுசெய்து திருப்பிக் கொடுத்துவிடுங்கள்,” என்று கேட்டுள்ளார். ஆனால், இதை நம்பாத மனிஷ் மற்றும் அவரது நண்பர்கள், சேர்ந்து “நாங்க எம்.எஸ். தோனி பேசுறோம்,” என்று கிண்டலாகப் பதிலளித்துள்ளனர். இருப்பினும் பொறுமையுடன் படிதார் நான் கிரிக்கெட் உலகில் முக்கியமான நபர்களைத் தொடர்புகொள்ள அந்த எண் தனக்குத் தேவைப்படுவதாக விளக்கியும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த படிதார், “சரி, நான் போலீஸை அனுப்புகிறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்துள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அவர் போனை துண்டித்த 10 நிமிடங்களிலேயே உள்ளூர் காவல்துறை மனிஷின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளது. அப்போது தான், தாங்கள் விளையாட்டாக நினைத்தது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை அந்த நண்பர்கள் உணர்ந்தனர். தாங்கள் பேசியது உண்மையாகவே விராட் கோலி மற்றும் ஏபி ஏ பி டி வில்லியர்ஸ்சிடம் தான் என்பதை அறிந்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். உடனடியாக அந்த சிம் கார்டை போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு பேசிய மனிஷ் மற்றும் அவரது நண்பர்கள் “ஒரு தவறான எண்ணால் நாங்கள் விராட் கோலியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எங்களின் வாழ்க்கை லட்சியமே நிறைவேறிவிட்டது,” என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.

 

   —    மு. குபேரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.