கூலி படம் ரிலீஸ் ! மவுசு குறையாமல், கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் !
மவுசு குறையாமல் கொண்டாடி தீர்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் !
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் கூலி படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டிக்கெட் ஆன்லைனில் ஓபன் ஆனவுடனே டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்க ஆரம்பித்தது.
தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இன்று ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இன்று வெளியான கூலி திரைப்படம் வியாழக்கிழமை வெளியான நிலையில், நாளை வெள்ளிக்கிழமை சுதந்திரதின விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என 4 நாட்கள் தொடர்ச்சியாக பல திரையரங்குகளில் கூலி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்றே கருதப்படுகிறது.
இந்நிலையில் கூலி பட கொண்டாட்டம் மதுரையில் சிறப்பாக நடைபெற்றுது. இதற்காக அதிகாலையே தியேட்டர்கள் முன் ரஜினி ரசிகர்கள் குவிந்தனர். பால்குடம் எடுத்தல், கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல், பால்அபிஷேகம், ட்ரம் செட், கட்டவுட்டுகள் கலேபரங்கள் என வழக்கமான ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் அடங்கியது.
பல்வேறு தியேட்டர்களில் 9 மணிக்கி படம் துவங்கியது தொடர்ந்து படத்தை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தியேட்டரில் விசில் சத்தம் அதிர ரஜினி ரசிகர்கள் தங்களது தலைவர் படத்தை கொண்டாடி தீர்த்தனர். கையில் கூலி பட ஸ்டெயிலில் பேஜ் கட்டி வந்தது குறிப்பிடதக்கது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்