தன்னிகரற்ற ”சேவை”க்காக முதல்வர் கரங்களால் விருது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெண்களுக்காக சிறந்த முறையில் தொண்டாற்றியதற்காக, தமிழகத்தின் சிறந்த பங்களிப்பை வழங்கிய சேவை நிறுவனத்துக்கான 2025 ஆம் ஆண்டிற்கான  விருதை பெற்றிருக்கிறது, “சொசைட்டி ஃபார் எஜூகேசன் வில்லேஜ் ஆக்சன் & இம்ப்ரூவ்மெண்ட்”. 79-ஆவது சுதந்திரதின விழாவில்,  முதல்வர் கரங்களால் விருதை பெற்றிருக்கிறார், தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்  கோவிந்தராஜ்.

சேவை விருது
சேவை விருது

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சொசைட்டி ஃபார் எஜூகேசன் வில்லேஜ் ஆக்சன் & இம்ப்ரூவ்மென்ட் என்ற அமைப்பு கடந்த 40 ஆண்டுகளாக மகளிர், குழந்தைகள், முதியோர் வளரிளம் பெண்கள், நலிவடைந்த பெண்கள் மற்றும் வீடற்றோர்களுக்கு சேவையாற்றி வருகிறது.

“சொசைட்டி ஃபார் எஜூகேசன் வில்லேஜ் ஆக்சன் & இம்ப்ரூவ்மெண்ட்” தொண்டு நிறுவனம்,  9650 சுய உதவி குழுக்களை தொடங்கி, வங்கிக்கடன் இணைப்பு பெறப்பட்டு, மகளிர் திட்டத்திடம் ஒப்படைத்துள்ளது. 960 நலிவடைந்த பெண்களுக்கு தொழிற்பயிற்சியும் அளித்துள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

திருச்சியில் உள்ள மகளிர் சிறைச் சாலையில் பெண் கைதிகளுக்காக ஒரு  சிறப்பு குடும்ப மற்றும் ஆலோசனை மையத்தை செயல்படுத்தி வருகிறது.

650 பெண்களுக்கு 4 ஆடுகள் வீதம் வழங்கி அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட உதவிபுரிந்துள்ளது. பணிபுரியும் பெண்களின் நலன் கருதி, அவர்களின் குழந்தைகளுக்காக பகல் நேரக் காப்பகத்தை நடத்தி வருகிறது.

சேவை விருது
சேவை விருது

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

திருச்சிராப்பள்ளி, கரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதரவுடன் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஏழை மக்களுக்கான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

1995 ஆம் ஆண்டு முதல், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் ஒப்படைக்கப்பட்ட 4 நியாய விலைக்கடைகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் 1339 குடும்பங்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இதுதவிர,  மாவட்ட சமூக நல அலுவலகத்துடன் இணைந்து குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது. இதுவரையில் 600-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியிருக்கிறது. 50-க்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்களை மீட்டிருக்கிறது. நூற்றுக்கும் அதிகமான பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்குள்ளான குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது.  2500-க்கும் அதிகமான குழந்தைகளை மீட்டிருக்கிறது.

சேவை கோவிந்தராஜ்.
சேவை கோவிந்தராஜ்.

Society for Education Village Action & Improvement என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே, “ SEVAI “ என்றானது. ”சேவை” என்ற பெயருக்கு ஏற்றாற்போலவே, தமது தொண்டு நிறுவனத்தை வழிநடத்தியதோடல்லாமல், வயது தளர்ந்தாலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையோடு இன்றளவும் சமூக தொண்டில் களமாடி வருபவர் அதன் நிர்வாக இயக்குநர் சேவை கோவிந்தராஜ்.

“சேவை” என்ற சொல் தான் அவரது அடையாளம். கோவிந்தராஜ் என்ற அவரது பெயருக்கு முன்னொட்டாக ”சேவை” என்ற சொல் சேர்ந்ததனால் அல்ல! அவரது உதிரமும் ஊணுமாய் உள்ளார்ந்து ”சேவை” இருப்பதானேலேயே, அவரது பெயரோடு பிணைந்து கொண்டது, அந்த சொல்.

தலை சிறந்த ”சேவை”க்கு அங்குசம் சார்பில் மனதார வாழ்த்துக்கள் !

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.