ஸ்டண்ட் சில்வாவுக்கு கேரள அரசு விருது!
தமிழ்த் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வருபவர்.
ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் ஸ்டண்ட் சில்வா. பலமுறை SIIMA விருது, எடிசன் விருது மற்றும் தமிழ் நாடு அரசு விருதுகளை வென்றுள்ளார்.
இப்போது நடிகர் பிருத்விராஜ் இயக்கி நடித்து வெளியான ‘எம்புரான் L2’ மற்றும் மோகன்லால் நடித்த ‘துடரும்’ ஆகிய படங்களுக்காக ஸ்டண்ட் சில்வாவுக்கு 2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வழங்கி கேரளா மாநில அரசு கவுரவித்துள்ளது.
— மதுரை மாறன்