மகனுக்காக இணைத் தயாரிப்பாளரான அப்பா! – ’குற்றம் புதிது’ பட சேதிகள்!
‘ஜி.கே.ஆர்.சினி ஆர்ட்ஸ்’ பேனரில் தருண் விஜய் தயாரித்து ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் கனிமொழி சேஷ்விதா ஹீரோயினாக நடிக்கிறார். மற்ற கேரக்டர்களில் மதுசூதன்ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன், பாய்ஸ் ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ்நாடெங்கும் ‘ஹரி உத்ரா புரொடக்சன்ஸ்’ ரிலீஸ் பண்ணுகிறது.
வரும் 29—ஆம் தேதி இப்படம் ரிலீசாவதையொட்டி, படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, 20-ஆம் தேதி காலை சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. இவ்விழாவில் படத்தின் ஹீரோ தருண் விஜய், ஹீரோயின் கனிமொழி சேஷ்விதா, மற்ற நடிகர்கள், சில தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ‘கெவி’ தமிழ் தயாளன், படத்தை ரிலீஸ் பண்ணும் ஹரி உத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள்…
தருண் விஜய்,
“எனது முதல் படத்தைத் தயாரித்து ஹீரோவாகவும் அறிமுகமாவதற்கு பெரும் துணையாக இருந்தவர்கள் எனது அம்மாவும் அப்பாவும் தான். டைரக்டர் நோவா ஆம்ஸ்ட்ராங் எனக்கு மிகவும் வித்தியாசமான கேரக்டர் கொடுத்துள்ளார். படம் தொடங்கி சில நிமிடங்களுக்கு ஸ்லோவாகத் தான் இருக்கும். அதன் பின் வேகமெடுக்கும்படி திரைக்கதையை அமைத்துள்ளோம். என்னுடன் நடித்தவர்கள் எல்லாருமே அனுபவசாலிகள். அவர்களின் ஆதரவுடனும் டெக்னீஷியன்களின் உழைப்புடனும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். எனது முதல் தயாரிப்பிற்கும் ஹீரோவாக எண்ட்ரியாவதற்கும் மீடியா நண்பர்கள் பேராதரவு தந்து வாழ்த்த வேண்டும்”.
கனிமொழி சேஷ்விதா,
“இந்தப் படம் தான் நான் கமிட்டான முதல் தமிழ்ப்படம். இந்த ராசி தான் எனது இரண்டு படங்கள் சமீபத்தில் ரிலீசானது. படத்தின் ஹீரோ தருண் விஜய், டைரக்டர் நோவா ஆம்ஸ்ட்ராங் உட்பட அனைவருக்கும் நன்றி”.
சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே “படத்தை விமர்சிங்க, தப்பில்ல. அதை பக்குவமா விமர்சிங்க. கண்டமேனிக்கு விமர்சிச்சு மனசை புண்படுத்தாதீங்க. தயாரிப்பாளர்களை வாழவிடுங்க” என யூடியூப்பர்களுக்கு வேண்டுகோள் வைத்தனர்.
இணைத் தயாரிப்பாளர் எஸ்.கார்த்திகேயன்,
“இந்தப் படத்தை வெளியிடும் ஹரி உத்ராவுக்கும் வாழ்த்த வந்திருக்கும் சினிமா பெரியவர்களுக்கும் நன்றி. எனது மகன் தயாரித்திருக்கும் இப்படத்தில் நான் இணைத் தயாரிப்பாளராக வேலை செஞ்சு சினிமா பத்தி நிறைய கத்துக்கிட்டேன். இந்த அனுபவத்தை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கப் போறோம். எனது மகன் தருண் விஜய்க்கு நல்லாதரவு தரும்படி மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன்”.
டைரக்டர் நோவா ஆம்ஸ்ட்ராங்,
“நான் கதை சொல்லப் போனதிலிருந்து இப்போது வரை எல்லாமே சிறப்பாக அமைந்ததற்கு கார்த்திகேயன் சாரும் தருண் விஜய் சாரும் தான் காரணம். இப்படத்தில் கொரில்லாவாக நடிக்க கடுமையான பயிற்சி எடுத்துள்ளார் தருண் விஜய். ‘த்ரில்லர்’ படமாக இருந்தாலும் எமோஷனலும் உள்ளது. எங்களை வாழ்த்தி ஆதரியுங்கள்”.
— மதுரை மாறன்