வேல்ஸ் பிலிம்ஸுடன் கைகோர்த்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்!
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என வரிசையாக ஹிட் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் முதன்முதலாக ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸுடன் கைகோர்த்து புதிய படத்திற்கு பூஜை போட்டுள்ளது. இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தில் அசோக்செல்வன் –நிமிஷா சஜயன் ஹீரோ-ஹீரோயினாக நடிக்கின்றனர். 20-ஆம் தேதி நடந்த பட பூஜையில் தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன், நடிகர் & டைரக்டர் சசிக்குமார், டைரக்டர் இரா.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் இயக்குனராக மணிகண்டன் ஆனந்தன் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு : புஷ்பராஜ் சந்தோஷ், இசை : திபு நைனன் தாமஸ், எடிட்டிங் : பரத் விக்ரமன், பி.ஆர்.ஓ.: யுவராஜ்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸின் ;ஹேப்பி எண்டிங்’, ‘ஒன்ஸ்மோர்’ படங்களின் ஷூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளது.
— மதுரை மாறன்