கல்லா கட்டும் மாஜி அதிகாரி… சிக்கலில் எம்.எல்.ஏ.

நெற்களஞ்சிய மாவட்டத்தில் வெற்றிலைக்கு பெயர்போன ஊரின் எம்எல்ஏ- வாக ’அன்பானவர்’ இருந்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு கூடுதலான பொறுப்பாக மாவட்டச் செயலாளர் பதவியும் வழங்கி தலைமை அழகுப் பார்த்தது.

இந்த நிலையில் எம்எல்ஏ-வின் உதவியாளர் என்றுக் கூறிக்கொண்டு ராஜாவான பெயரைக்கொண்ட மாஜி பிடிஒ ஒருவர் செய்யும் அட்ராசிட்டி கட்சி சகாக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட மாஜி அதிகாரி எம்எல்ஏ-வின் அலுவலகத்தை டெண்டர் எடுக்கும் அலுவலகமாக மாற்றிவிட்டாராம். அதுவும் அனைத்து டீலிங்கையும் எம்எல்ஏ-வின் அறையில் வைத்து பேசி கல்லாக்கட்டுவது தான் இதில் உச்சக்கட்டம் என்கின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட மாஜி அதிகாரி எம்எல்ஏ-வின் வரம்புக்குள் வரும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்புக்கொண்டு முக்கிய அரசு ஆவணங்களையெல்லாம் தனது வாட்சப் எண்ணுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடுகிறாராம்.

இதனால் அதிகாரிகளோ நாளைக்கு இது ஆப்பாக நமக்கே வந்துவிடாதா புலம்பி தள்ளுகின்றனர்.

ஸ்பை டீம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.