அங்குசம் சேனலில் இணைய

காக்கையை ஏமாற்றி … ஆண் குயிலும் பெண் குயிலும் சேர்ந்து நடத்தும் நாடகம் !

பறவைகள் பலவிதம் - 14

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இது குயில்களின் இனப்பெருக்க காலம் … ஏனெனில் இது காக்கைகளுக்கும் இனப்பெருக்க காலம். காலையிலிருந்தே ஆண் குயில்களின் சத்தத்தை நம்மூரில் அதிகம் கேட்க முடியும். உங்களை காலையில் எழுப்பும் குரல் குயிலினுடையதாக இருக்கும். கவனித்துப்பாருங்கள்! குயில் அழகாகப் பாடும் பறவை இனத்தைச் சேர்ந்தது.

மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று, அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும். இதனை அறியாத காகம் குயிலின் முட்டையையும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். குயிலின் குஞ்சு குறிப்பிட்ட சில நாட்கள் அப்பறவைகளின் கூட்டில் இருந்தே உணவு உண்ணும். குயில்களில் பல வகை உண்டு. படத்தில் இருப்பது ஆண் (கருப்பாக இருப்பது) மற்றும் பெண் (கருப்பு வெள்ளை புள்ளியாய் இருப்பது) இணை.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பறவைகள் பலவிதம்இனப்பெருக்கக்காலத்தில் கூவும் ஆண் குயிலின் குரல் பெண் குயிலைவிட மிக இனிமையாக இருக்கும். தற்சமயம் காக்கைக்கும், குயிலுக்கும் இது இனப்பெருக்கக்காலம்.  மழைக்காலம் வருவதற்கு முன்பே இதன் குஞ்சுகள் வெளிவந்து வளர்ந்து விடவேண்டும். குயிலின் இணை காக்கை கூட்டில் முட்டையிட சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஆண் மற்றும் பெண் குயில், காக்கை கூடுள்ள மரத்திற்கு எதிரிலுள்ள மரங்களில் அமர்ந்து கூவிக்கொண்டு காக்கையின் கவனத்தை திசை திருப்ப எத்தனிக்கின்றது. குயிலின் கூவலொலி கேட்டாலே காக்கைகள் கூட்டத்தில் ஒரே களேபரம். உங்கள் வீட்டின் அருகேயுள்ள மரங்களிலும் இதன் குரலை அடிக்கடி கேட்கலாம் …

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த குயில்களின் நிறைய வகைகள் உள்ளது.  ஒவ்வொன்றாக பார்க்கலாமா?

 

—  ஆற்றல் பிரவீன்குமார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.