தோழியின் துரோகம்! பேனர் வைத்து பழிவாங்கிய பெண்!
நம்முடைய நண்பர்கள் எவரேனும் நமக்கு துரோகம் செய்துவிட்டால் அவர்களை பழிவாங்க அவர்களோடு நேரடியாக சண்டையிடுவோம் அல்லது சிறிய பிரச்சினையாக இருந்தால் வாட்ஸ்அப் அல்லது சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் வைத்து அவர்களை வெறுப்பேத்துவோம். ஆனால் நான் சொல்லப்போகும் பெண்ணின் கதையே வேறு!
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹாங்ஷானைச் சேர்ந்த ஒரு பெண் அவரது குடியிருப்பு வளாகத்தில் தனது தோழியை குறிப்பிட்டு ஒரு பதாகைகளைத் தொங்கவிட்டு சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறார். அந்தப் பதாகையில் ”கணவருடன் ஐந்து வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி, என் சிறந்த தோழி ஷி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அந்த பெண் 12 ஆண்டுகளாக தன்னுடன் தோழியாக இருந்தவர், ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தனது கணவருக்குப் பாலியல் சேவை செய்ததாகவும், இந்தத் துரோகத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் அந்தக் குடியிருப்பு பகுதியில் இது போன்ற பதாகைகளை அப்பெண் வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.