பஸ்ஸில் பிக்பாக்கெட் அடித்த பஞ்சாயத்து தலைவி ! பெண்டிங்கில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் !
தங்க நகை திருட்டு
ஓடும் பேருந்தில் தங்க நகைத் திருடியதாக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு நெற்குன்றம் ரெட்டித் தெருவைச் சேர்ந்தவர் வரலட்சுமி (50). என்ற பெண்மணி ஜூலை 14-ஆம் தேதி காஞ்சிபுரத்துக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு அரசு பேருந்து மூலம் கோயம்பேடு வெங்காய மண்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது , தான் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பவுன் தங்க நகை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அது குறித்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். வரலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், நகை திருட்டில் ஈடுபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் “குடியாத்தம் அடுத்த நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர்” பாரதி – 56 (திமுகவைச் சேர்ந்தவர்) என தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாரதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரதி ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தவர். திமுகவிலும் ஒன்றிய அளவில் பொறுப்பில் இருந்தவர். இவர் மீது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், தெற்கு காவல் நிலையம் மற்றும் ஆம்பூர், திருப்பத்தூர் காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 10 திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
— மணிகண்டன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.