கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கொலையில் முடிந்த கொடூரம்!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் உட்கோட்டம், துவரங்குறிச்சி . 53/22, U/s 294(b), 323, 506(il), 307 IPC @ 294(b), 302 IPC -படி இவ்வழக்கின் புகார்தாரரான திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி, செட்டியபட்டியை சேர்ந்த ராமலிங்கம் 53 த.பெ மாயழகன் என்பவரிடம் அதே ஊரைச் சேர்ந்த எதிரி-2 வெள்ளையம்மாள் 43 க.பெ வெள்ளைச்சாமி (லேட்) என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் எதிரி-1 பச்சமுத்து 48 த.பெ பம்பையன், மதியனை, பொன்னமராவதி வட்டம் புதுக்கோட்டை மாவட்டம் என்பவருடன் சேர்ந்து கடந்த 21.03.2022-ம் ஆண்டு மேற்படி வழக்கின் புகார்தாரரான ராமலிங்கம் என்பவரின் மகன் கிருஷ்ணன் 18 த.பெ ராமலிங்கம் என்பவரை தாக்கி அருவாளால் வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தவர் 06.04.2022 அன்று இறந்துவிட்டார்.

இவ்வழக்கு விசாரணையானது திருச்சி நீதிமன்றத்தில் (ADJ-II) நடைபெற்று வந்த நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்பரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்தார். இந்நிலையில் இன்று (08.09.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் (ADJ-II) எதிரி-1 பச்சமுத்து 48 த.பெ பம்பையன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய். 1500 அபராதமும், எதிரி-2 வெள்ளையம்மாள் 43 க.பெ வெள்ளைச்சாமி (லேட்) என்பவரை வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார்.
இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக துவரங்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் துவரங்குறிச்சி காவல் நிலைய நீதிமன்ற காவலர் திரு.முத்து ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப வெகுவாக பாராட்டினார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.