அங்குசம் சேனலில் இணைய

உலகின் அறியாமையை கல்வியால் வென்று காட்டிய சக்தி மிகு ஆயுதம்!

கத்தோலிக்க திருச்சபையும், தென்னிந்திய திருச்சபையும் ஏறத்தாழ 5,000 பள்ளிகளை நடத்துகின்றன.

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேவாலயங்கள் தோன்றிய காலம் தொடங்கி கிறிஸ்தவர்களின் காணிக்கை மூலம் கிடைத்த வருவாய், அனைத்து தரப்பு மக்களுக்குமான கல்விக்கு செலவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று இயேசு சபையின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையோ பல ஆயிரங்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சென்னை லயோலா கல்லூரி, தூய வளனார் கல்லூரி (திருச்சி), மற்றும் புனித ஜோசப் கல்லூரி (திருச்சிராப்பள்ளி) போன்றவை இயேசு சபை, தமிழ் மக்களுக்கு அளித்த கொடை ஆகும்.

ஆந்திராவில் ஆந்திரா லயோலா கல்லூரி, சாந்தா கிளாரா பல்கலைக்கழகம், மார்கரெட் பல்கலைக்கழகம் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் போன்றவை இந்தச் சமூகத்திற்கு இயேசு சபை வழங்கிய ஈவுகள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

உலக அளவில் 168 கல்லூரிகள், பல  பல்கலைக்கழகங்கள், 324 உயர்நிலைப் பள்ளிகளை நிர்வகித்து உலகின் கல்வி வள்ளலாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது இயேசு சபை.

சீரோ மலபார் கத்தோலிக்க  திருச்சபை
சீரோ மலபார் கத்தோலிக்க  திருச்சபை

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

சுமார் 40 நாடுகளில் கல்லூரிகளையும், 55 நாடுகளின் உயர்நிலைப் பள்ளிகளையும் நடத்துகிறார்கள் இயேசு சபையினர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், 1852-ம் ஆண்டுவாக்கில் கிறிஸ்தவ மிஷினரிமார்கள் தங்களது ஊழியத்தை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் மட்டும் 1,885 கல்வி நிலையங்களை நடத்தி இருக்கிறார்கள். அக்கல்வி நிலையங்களில் 38,000 மாணவ மாணவிகளும் படித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தது புனிதர் இக்னேசியஸ் தொடங்கிய இயேசு சபை தான்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 24 டயோசிஸ்கள், தென்னிந்திய திருச்சபையில் உள்ளன. கத்தோலிக்க திருச்சபையும், தென்னிந்திய திருச்சபையும் ஏறத்தாழ 5,000 பள்ளிகளை நடத்துகின்றன.

தென் இந்திய திருச்சபையின் திருச்சி தஞ்சாவூர் பேராயத்தின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூடக் கரூரில் பிஷப் சாலமோன் துரைசாமி கல்லூரி தொடங்கப்பட்டு அங்குப் பல்வேறு மதத்தைச் சார்ந்த மாணாக்கர்கள் கல்வி பெற்று வருகிறார்கள்.

சீரோ மலபார் கத்தோலிக்க  திருச்சபை, 4,860 கல்வி நிறுவனங்களையும், 262 திருச்சபை மற்றும் 2,614 சுகாதாரம் மற்றும் தொண்டு நிறுவனங்களையும் நடத்துகிறது.

தேசத்தைக் கல்வியால் கட்டியெழுப்புவதில் சிரோ-மலபார் திருச்சபையின்  பங்களிப்பு விலைமதிப்பற்றது.

கிறிஸ்தவ திருச்சபைகள் மேற்கொண்ட கல்விதான் இந்தியாவை இன்று கல்வியில் வல்லரசு ஆக்கும் அளவிற்கு உயர்த்தி இருக்கிறது.

எனவே தேவாலயங்கள் என்பது நாம் அனைவரும் உச்சரிக்கும் ஒரு சொல் மட்டுமல்ல; அது உலகின் அறியாமையை கல்வியால் வென்று காட்டிய சக்தி மிகு ஆயுதம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.