வலது கால் ஷூக்களை மட்டும் கொள்ளையடித்த வினோத திருடர்கள் !
திருட்டையே தவறாக திருடி திருடர்கள்
ஒரு திரைப்படத்தில் காமெடி நடிகர் வைகை புயல் வடிவேல் திருடுவதை தவறாக செய்து போலீஸாரிடம் சிக்கி சொதப்பி இருப்பார். அது திரைப்படத்தில் நகைச்சுவைக்காக வைத்திருப்பார்கள். ஆனால் நான் தற்போது சொல்லப் போகும் திருடர்களின் கதையே வித்தியாசமான ஒன்று.
இவர்கள் வேறு யாரும் இல்லை பெரு நாட்டு திருடர்கள் தான். இவர்கள் செய்த திருட்டையே தவறாக திருடி திருடர்களின் மரியாதையையே கெடுத்து விட்டார்கள். இந்த அறிவாளி திருடர்கள் பெருவின் உள்ள ஹுவான்காயோ நகரில் செருப்புக் கடை ஒன்றில் ஷட்டரின் பூட்டை உடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 200 வலது கால் ஸ்னீக்கர்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து பேசி இருந்தா கடையின் உரிமையாளர், இவர்களால் திருடப்பட்ட வெவ்வேறு பிராண்டுகளின் வலது கால் ஸ்னீக்கர்களின் மொத்த விலை ரூ.10,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 12 லட்சம்) என்றும். மேலும் திருடப்பட்ட இந்த ஸ்னீக்கர்களை திருடர்களால் விற்க கூட முடியாது. அப்படி இருக்கையில் எதற்கு இந்த முயற்சிகள் என்று அவரே குழம்பியுள்ளார்.
திருடப்பட்ட காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதை வைத்து உள்ளூர் காவல்துறைத் தலைவர் எடுவான் டயஸ் ஊடகங்களுக்கு கூறுகையில், “சம்பவ இடத்தில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த கொள்ளையில் வித்தியாசமாக வலது கால் ஸ்னீக்கர் மட்டுமே திருடப்பட்டுள்ளன. அவர்கள் திருடும் அவசரத்தில் எதை எடுப்பது என்று தெரியாமல் வலது காலின் காலணிகளை மட்டும் திருட நினைத்தார்களா? இல்லை இது திட்டமிட்டு திருடப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.