அங்குசம் சேனலில் இணைய

தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ! இன்றைய பலி – 2 ! படுகாயம் – 5 பேர் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கங்கர்செவல்பட்டி சித்துராஜபுரம் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான சென்னை உரிமம் பெற்ற “திவ்யா” பட்டாசு ஆலையில், இன்று (செப்-17) மதியம் 1 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டது. 30-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், சீனி வெடி தயாரிப்பு அறையில் மூலப்பொருள் உராய்வால் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு அறைகள் முழுமையாக தரைமட்டமானது.

கௌரி
கௌரி

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்த விபத்தில், கண்டியாபுரம் முகாமை சேர்ந்த கௌரி (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  100% தீக்காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மண்குண்டாம்பட்டி காளிமுத்து (35), சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மண்குண்டாம்பட்டி, கண்டியாபுரம் பகுதியைச் சேர்ந்த மேகலா (18), குமரேசன் (30), சிவரஞ்சனி (39), மாரியம்மாள் (40), மாரனேரி லட்சுமி (40), எழுபம்பச்சேரி ஆகிய அனைவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தீயணைப்பு துறை
தீயணைப்பு துறை

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறை விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள ஆலங்குளம் போலீசார், ஆலையின் போர் மேன் சோமசுந்தரத்தை கைது செய்துள்ளனர். மேலும் ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில், சட்டவிரோத பட்டாசு ஆலைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அலட்சியப்படுத்தும் ஆலைகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது எதிர்பாராத விபத்தில் சிக்கிய விவகாரத்தில், சம்பந்தபட்ட ஆலையின் உரிமையாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்து எஸ்.பி. கண்ணன் அதிரடி காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள் விருதுநகர் மாவட்டத்தின் பெரும் தலைவலி பிடித்த விவகாரமாக மாறியிருக்கிறது.

 

-மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.