சீரணி அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருவெறும்பூர்  ஒன்றியம் நவல்பட்டு ஊராட்சி பகுதி அண்ணா நகர் மைதாதனத்தில் சீரணி அரங்கம்  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி பொதுநிதி 2025-2026 ஆம் ஆண்டு ரூ 9.42000 நிதியில் அமைக்கப்பட்டதை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி ஒன்றிய கழகச் செயலாளர்கள் கங்காதரன் மற்றும் கழக நிர்வாகிகள் சண்முகம், கயல்விழி, சுதாகர், பொதுமக்கள் நேதாஜி இளைஞர் இயக்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழக முதல்வரின் அறிக்கை திமுகவின் அறிக்கை அல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் அறிக்கை அது என்னவென்றால் ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் இருந்து வாங்கக்கூடிய வரி பகிர்வில் இருந்து  41 சதவீதம் தான் திரும்பத் தருகின்றனர்.

அதை பார்க்கும் பொழுது மாவட்ட வாரியாக ஒரு சதவீதம் 2 சதவீதம் ,3 சதவீதம், 10 சதவீதம் என பிரித்து கொடுக்கிறோம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மாநிலங்களிலிருந்து பெறப்படும் வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என 16வது நிதி குழுவில் செய்ய வேண்டுமென வலியுறுத்தி இருந்தோம் ஆனால் மீண்டும் 41 சதவீதம் தான் என அறிவித்து உள்ளனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சீரணி அரங்கம் தமிழகத்திற்கான வரி பகிர்வு 5 ஆண்டுகளுக்கு  4.097 தான் கிடைக்கும்.

நமது துணை முதல்வர் சொல்வார் நாம் ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால்  29பைசா தான் அவர்கள் நமக்கு திரும்ப செலுத்துகிறார்கள் என்று இதையெல்லாம் பார்க்கும் பொழுது நமக்கு வரவேண்டிய வருவாயில் 5000 கோடி குறையும்.

எனது பள்ளி கல்வித்துறைக்கு ரூ3548 கோடி ரூபாய் வரவேண்டும் ஆனால் முன்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டு கையெழுத்து இட்டால்தான் தருவேன் என கூறுகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக ஜல் ஜீவன் திட்டத்தை தமிழகத்தில் தான் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம் என பாராட்டு பெற்றுள்ளோம். ஆனால் அதற்கு வழங்க வேண்டிய ரூ 3112 கோடியை இக வரை வழங்கவில்லை இப்படி எல்லா திட்டத்திலும் பணம் நமக்கு வருவதில்லை இப்பவாவது கொடுப்பவர்களாக என பார்த்தால் அதுவும் இல்லை.

வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வாசிக்கும் திருக்குறளும் வாசிக்கப்படவில்லை நமக்கு நிதியும் அது போல் கொடுக்க மாட்டார்கள் அதை தான் நம் தமிழக முதல்வர் கவலையுடனும் கண்டிப்புடனும் செய்து உள்ளார். அதுதான் எனது நிலைப்பாடு என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.