அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் பார்வையில் ‘கிஸ்’ 

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல். டைரக்‌ஷன் : சதீஷ் கிருஷ்ணன். ஆர்ட்டிஸ்ட் : கவின், ப்ரீத்தி அஸ்ரானி, விடிவி கணேஷ், ஆர்ஜே விஜய், பிரபு, தேவயானி, கெளசலயா, ஷக்தி, ராவ் ரமேஷ், ஒளிப்பதிவு : ஹரிஷ் கண்ணன், இசை : ஜென் மார்டின், எடிட்டிங் : ஆர்.சி.பிரணவ், ஆர்ட் டைரக்டர் : மோகன மகேந்திரன், பி.ஆர்.ஓ : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல் நாசர்.

டைட்டிலைப் பார்த்ததும் ஏடாகூடமா, எசகுபிசகான, நான் – வெஜ் படமா இருக்குமோன்னு யாரும் பதற வேணாம். 100% வெஜிடேரியன் படம். 2கே கிட்ஸ் மட்டுமல்ல, 70 கிட்ஸும் பார்க்கக் கூடிய படம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஆலாலகண்டன் என்ற மன்னனுக்கு அவனது ராஜ்ஜியத்தில் யார் காதலித்தாலும் பிடிக்காது. அதையும் மீறி காதலிக்கும் ஒரு ஜோடியை எரித்துக் கொன்றுவிடுகிறான். தீயில் எரியும் போது, “நீயும் ஒரு பெண்ணைக் காதலித்து, அவள் செத்து அந்தப் பாவம் உன்னை ஏழேழு ஜென்மத்திற்கும் துரத்தும்” என காதலன் சாபம்விடுகிறான். இதப் பத்தி ஒரு புத்தகமும் எழுதுகிறான் மன்னன். காதலன் சாபத்தின்படி செத்தும்விடுகிறான். அந்தப் புத்தகம் கவின் கையில் கிடைத்ததும் எதிரே பார்க்கும் காதலர்கள் லிப் கிஸ் அடித்தால்..அவர்களின் வாழ்க்கையில் நடக்கப் போகும் விபரீதங்கள் கவின் கண் முன்னே வந்துவிடுகின்றன.

கிஸ் மூவிஇதான் இந்த ‘கிஸ்’ரகசியம். இரண்டு மணி நேரம்  செம ஜாலி சுவாரஸ்யம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மன்னன் காலத்து புக் ரகசியத்தை இந்த டிஜிட்டல் இளசுகளுடன் கனெக்ட் பண்ணி செம காமெடி கலாட்டா பண்ணியிருக்கார் டைரக்டர் சதீஷ் கிருஷ்ணன். சீன்ஸ் எல்லாமே ஃப்ரஷ்ஷா இருக்கு.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஹீரோ கவினும் செம ஃப்ரஷ்ஷா இருக்கார், நடிப்பிலும் பாடிலாங்குவேஜிலும் டிஃபெரெண்ட் காட்டியுள்ளார். அம்மா தேவயானியைவிட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் [ கெளசல்யா] அப்பா ராவ் ரமேஷ் சென்றதும் அவரிடம் காட்டும் கடுப்பு, எரிச்சல், க்ளைமாக்ஸில் தேவயானியே நடந்ததைச் சொன்ன பிறகு தேம்பித் தேம்பி அழாமல், லேசாக கண்ணீரைத் துடைக்கும் சீனில் சபாஷ் போட வைக்கிறார் கவின். ‘அயோத்தி’யில் பார்த்த ப்ரீத்தி அஸ்ரானியா இது? என ஆச்சர்யப்பட வைக்கிறார். “லவ் பண்ணுறவ தாண்டா ஆம்பளய துரத்தித் துரத்தி வருவா. ஆனா உன்னை வெறுக்குறதுக்கு துரத்தி வரும் கொடுமை எனக்குத் தாண்டா” என கவினிடம் ப்ரீத்தி கண்ணீர் சிந்தும் காட்சியில் நடிப்பில் ஸ்கோர் பண்ணிவிட்டார். இன்னும் கொஞ்சம் சதை போட்டா நல்லாருக்கும்த்தா…

கிஸ் மூவிபடத்தின் டாப் ஸ்கோரர்ன்னா அது நம்ம விடிவி கணேஷ் தான். இவர் வரும் சீன்களெல்லாமே காமடி அதகளம் தான், சிரிப்பு சரவெடி. இவரின் டயலாக் மாடுலேஷனே மனசை அள்ளுது போங்க.

விடிவி கணேஷின் மகனாக கவினின் நண்பனாக ஆர்ஜே விஜய் அசத்தல் காம்பினேஷன். டைமிங் கவுண்டர் அட்டாக் காமெடியில் பின்னுகிறார். கவினின் தம்பியாக ஷக்தியும் ஓகே.

மியூசிக் டைரக்டர் ஜென் மார்ட்டினின் பாடல்களும் பின்னணி இசையும் ‘கிஸ்’சை சுவையாக்குகின்றன.

ஆஸ்பத்திரியில் இரண்டு நாய்களின் லவ் அஃபெக்ட், மன்னன் ஃப்ளாஷ்பேக்கில் எரியும் லவ் ஜோடியை இப்போது தீயில் எரியும் கவின் –ப்ரீத்தி அஸ்ரானி ஜோடியுடன் கச்சிதமாக பொருத்தி  க்ளைமாக்ஸை திருப்தியுடன் முடித்திருக்கிறார் டைரக்டர் சதீஷ் கிருஷ்ணன்.

 

    —     ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.