அங்குசம் சேனலில் இணைய

தமிழகத்தில் தலைதூக்கும் வடக்கன்களின் அட்ராசிட்டி ! தலையிட்டு தடுத்து நிறுத்துமா, தமிழக அரசு ?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் மத்தூர் கொல்லை பகுதியில், வழக்கறிஞர் கலீல் என்பவர், தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில், மாடு, ஆடு, கோழி  பண்ணை அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்தப் பண்ணையில்.  திருப்பத்தூரைச் சேர்ந்த அஷ்கர் பாஷா என்பவர் தனியாக வசித்து பராமரிப்பு செய்து வந்த நிலையில், தனக்கு உதவியாக . உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களை  அழைத்து வந்து பணியில் அமர்ந்திருந்தார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பண்ணையில் இருந்தவாரே, அஷ்கர் பாஷா, தினமும் தனது தாய் மற்றும் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 14-ந் தேதி  முதல்  அஷ்கர் பாஷா, அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளாத நிலையில், சந்தேகமடைந்த அஷ்கர் பாஷா பணியாற்றும் நிலத்திற்கு வந்த அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அப்போது, அங்கு அஷ்கர் பாஷா மற்றும் அவரது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனம்  அவருடன் பணியாற்றி வந்த 2 வடமாநில இளைஞர்களும் காணாமல் போனதை அறிந்தவர்கள் 17-ந் தேதி உமராபாத் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளனர்.

அஷ்கர் பாஷா
அஷ்கர் பாஷா

இந்த நிலையில், அஷ்கர் பாஷா பணியாற்றி வந்த அதே நிலத்திலுள்ள கிணற்றில் சடலமாகக் கிடந்துள்ளதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக உமராபாத் காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர் மற்றும் ஆம்பூர்  தீயணைப்புத்துறையினர், கிணற்றில் சடலமாகக் கிடந்த  அஷ்கர் பாஷாவின் உடலை மீட்டெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார்,  அஷ்கர் பாஷா முகத்தில் பலத்த காயங்கள் இருப்பதை கண்டறிந்ததால்,  அஷ்கர் பாஷாவை வடமாநில இளைஞர்கள் அடித்துக் கொலை செய்து, கிணற்றில் வீசிச் சென்றிருக்கலாம்  என்று சந்தேகமடைந்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து தப்பி ஓடிய வடமாநில இளைஞர்களை பிடிக்க திருப்பத்தூர் எஸ்பி சியாமளா தேவி  தலைமையான தனிப்படையினர்  . உத்தரபிரதேச மாநிலத்திற்கு  சென்று கொலை சம்பவத்தில் ஈடுபட்ட “அனில் குமார், மற்றும் அங்கீத் ஆகிய இருவரை கைது செய்து உமராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

எஸ்பி சியாமளா தேவி 
எஸ்பி சியாமளா தேவி

அஷ்கர் பாஷா  மது போதையில்  தொடர்ந்து அவர்களை  தரக்குறைவாக பேசி வந்ததாகவும், சம்பளம் சரிவர கொடுக்கவில்லை எனவும், சம்பவத்தன்று அணில் குமார் சமைத்து பரிமாறிய உணவை அஷ்கர்பாஷா காலால் எட்டி உதைத்ததாகவும்  இவ்வாறு அவமானப்படுத்தியதால் ஆத்திரமடைந்த வடமாநில இளைஞர்கள் இருவரும் அஷ்கர் பாஷாவின் கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் வீசிவிட்டு அஸ்கர் பாஷாவின் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு  ஓசூர் வரை சென்றதாகவும்  அங்கிருந்து பெங்களூர் சென்று ரயில் மூலம் சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு தப்பி ஓடியதாகவும் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.

இதனைத்தொடர்ந்து,  இருவர் மீதும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, அணில் குமாரை வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும், சிறுவன் அங்கித்தை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

விவசாய நிலத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவரை  உடன் பணிபுரிந்த வட மாநில இளைஞர்கள் கழுத்தை நெரித்து  கொலை செய்து  கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அணில் குமார்
அணில் குமார்

தமிழ்நாட்டில் சமீபத்தில் (வடக்கன்கள்) வடமாநில இளைஞர்கள் நிகழ்த்திய தாக்குதல்கள் கடந்த மார்ச் 5-ந் தேதி, சென்னை மதுரவாயிலில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட தகராறில் தமிழக தொழிலாளிகளை தாக்கிய வட மாநில தொழிலாளிகள் இரும்புக் கம்பியால் தாக்கிய சம்வபத்தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜீதுராம் நாயக் (32), கேதார் ராவுட் (32) மற்றும் சானியா நாயக் (28) மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தும்பலுபட்டியில் செங்கல் சூலையில் வேளை பார்த்து வந்த வடமாநில இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது.

கடந்த வாரம் ஆம்பூர் சம்பவம் நடந்த அதே 17-ந் தேதியன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் மீது வட மாநில நபர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில்  காயமடைந்த கோவையைச் சேர்ந்த தங்கப்பன், தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை, கேரளாவைச் சேர்ந்த பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், தங்கப்பன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

செப்டம்பர் 2-ந்தேதி திருவள்ளூர் – காட்டுப்பள்ளியில் போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவத்தில், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட 6 பிரிவுகளில் 50 பேர் மீது வழக்குப்பதிவு  செய்து சிறையில் அடைத்துள்ளது போலீஸ் .

2024 இல்  மேட்டூர் அணையை அடுத்த கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மாதேஸ்வர மலைக்கு செல்லும் வழியில் காரைக்காடு பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த தமிழக காவலர்கள் சுற்றுலா பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது, பேருந்தில் மதுபோதையில் இருந்த வட மாநில இளைஞர்கள் காவலர்களை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியதில் போலீசார் பலத்த காயமடைந்தனர்.

இது பழைய கதை என்று ஒதுக்கிவிட முடியாது. செப்டம்பர் 22 அன்று எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெண் மருத்துவரின் தலைமுடியை இழுத்து கல்லால் தாக்கியதில் பலத்த காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கிய வடமாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, கருத்து தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் எம்எல்ஏ, ”தமிழ்நாட்டின் இளைஞர்கள் கல்வி கற்று, பட்டம் பெற்றும் வேலை இன்றித் தவிக்கும் வேதனையை, நாம் தினமும் கண்டு வருகின்றோம். ஆனால், குறைந்த கூலி என்ற பெயரில் வடமாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தும் சூழ்ச்சித் தீவிரமாக நடைபெறுகிறது. தமிழர்களின் வாய்ப்புகளைப் பறித்து, தமிழரின் வாழ்வுரிமையை மிதிக்கின்ற இந்தச் சதியை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை எச்சரித்துள்ளது.

ஒன்றிய அரசின் தமிழர் விரோதக் கொள்கையும், திட்டமிட்டு வடமாநிலத்தவர்களை குடியேற்றும் அரசியலும், நாளுக்கு நாள் தமிழரின் வேலைவாய்ப்பு, வாழ்வுரிமை, வாக்குரிமை, அரசியல் அதிகாரம் அனைத்தையும், சுரண்டுவதற்காகவே செய்யப்படுகின்றன.

அதற்குச் சான்றாகவே, திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில்,  வடமாநிலத்தவர்கள் கூட்டமாகக் குவிந்து, காவல்துறையினரைத் தாக்கும் அளவிற்கு சென்றுள்ளதைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டின் காவல்துறையை நேரடியாகத் தாக்குவது, தமிழ்நாட்டின் சட்டம்  ஒழுங்கிற்கு விடப்பட்ட நேரடியானச் சவாலாகும். இந்தக் கொடூரச் செயலைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக் கடுமையாகக் கண்டிக்கிறது.

வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கும் சட்டம் உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டும். நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள உள்நுழைவுச் சட்டம், தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்பட வேண்டும். ஒப்பந்தக் காலம் முடிந்த பின்னரும் இங்கே பணி செய்து வரும் வட மாநிலத்தவர்களைக் கண்டறிந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகுக் குடியேறிய வடமாநிலத்தவர்களுக்கு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக்கூடாது.

தமிழரின் வேலைவாய்ப்பு, வாழ்வுரிமை, வாக்குரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சிகளையும், திட்டமிட்ட வடமாநிலத்தவர்களின் குடியேற்ற அரசியலையும், தமிழ்நாட்டு மக்கள் இனி ஒருபோதும் சகிக்கமாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களின் உரிமை, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றைக் காக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் மேலும் தீவிரமாகவும் தளர்ச்சியின்றியும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக” தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

ஆங்காங்கே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வடமாநில தொழிலாளிகள்)  தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதும். அடித்து கொலை செய்து வீசுவதுமாக தொடர்கதையாகி வருகிறது. அதேவேளையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதலும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு அரசு பொறுப்பேற்று தீர்வு காண வேண்டுமென்பது எல்லோருடைய எண்ணமுமாக உள்ளது.

 

 —          மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.