தனித்தனியாக தத்துகொடுக்கப்பட்ட இரட்டையர்கள் 17 ஆண்டுகள் கழித்து இணைந்த சுவாரஸ்யம்!
பொதுவாக இரட்டையர்கள் என்றாலே இருவருக்கும் இனம் புரியாத ஈர்ப்பு மற்றும் அன்பு இருக்கும் என்று கூறுவார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நெகிழ்ச்சி சம்பவம் சீனாவில் நிகழ்ந்திருக்கிறது.

சீனாவின் ஹெபே மாகாணத்தில் ஒரே நகரத்தில் ஸாங் குவோஸின், ஹை சாவ் எனும் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர். இந்த இருவரும் தற்செயலாக சந்தித்து சிறந்த நண்பர்கள் ஆகியுள்ளனர். இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர், தங்களால் இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியவில்லை என்று 10 நாட்களில் தத்துக்கொடுத்துள்ளனர். அவர்கள் தத்துக்கொடுக்கும் போது அதன் முக்கிய நிபந்தனையாக, தத்துக்கொடுக்கப்படும் குடும்பங்கள் ஒரே நகரத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஸாங் குவோஸின் மற்றும் ஹை சாவ் ஒரே நகரத்தில் வசித்து வந்துள்ளனர். இருவருமே ஒருவரை ஒருவர் தங்களின் 17 வயது வரை அறிந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் தான், ஒரு நாள் அருகில் இருக்கும் துணிக்கடைக்கு சென்றபோது தற்செயலாக இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டு பின்னர் சிறந்த நண்பர்கள் ஆகியுள்ளனர். அப்போது இருவருக்கும் ஒரே தேதியில் பிறந்த நாள் வருவதை அறிந்து ஆச்சரியப்பட்டனர். அதன் பின்னர் குடும்பத்தினரிடம் விசாரித்த போது அவர்கள் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்ற உண்மை தெரியவந்துள்ளது. எனவே நண்பர்களாக பழகிய இருவரும் உண்மையாகவே சகோதரிகள் என்று தெரியவந்தவுடன் இருவருக்கும் இடையே பாசம் அதிகரித்து இவரும் அருகருகே ஒரு வீட்டை வாங்கி ஒன்றாக வசித்து வருகின்றனர். இப்போது இவர்களுக்கு 37 வயதாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-மு. குபேரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.