பகலில் நீதிபதி இரவில் ஆபாச பட நடிகர்!
அமெரிக்காவை சேர்ந்த கிரிகோரி என்பவர் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச பட நடிகராகவும் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்லி பேன்ஸ் என்ற சேனலில் அவர் ஆபாச நடிகராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

33 வயதான அந்த நீதிபதியின் பெயர் கிரிகோரி பேரு மட்டும் இல்ல ஆளோ கொஞ்சம் வித்யாசமானவர்தான். நியூயார்க் நீதிமன்றத்தில் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச பட நடிகராகவும் வாழ்ந்து வந்த இவர் இதுவரை 100 வீடியோக்களுக்கு மேல் இவர் வெளியிட்டுள்ளார். வீடியோ பார்க்க அவருடைய ரசிகர்களிடம் மாதம் 12 டாலர் வரை வசூலித்தும் உள்ளார்.
இந்த நிலையில் “முறையற்ற நடத்தை” என்ற அடிப்படையில் நியூயார்க் நகர அதிகாரிகளால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நம்ம ஜட்ஜய்யா அதுக்கு என்ன விளக்கம் கொடுத்திருக்காருன்னா “நான் ஒரு நீதிபதி’ நான் பகல்ல நீதிபதி வேலையை பாக்குறேன். ராத்திரி என்னுடைய சொந்த தொழில் சார்ந்த வேலையை பாக்குறேன். இது ஒரு குத்தமா” என அசால்டாக டீல் பண்ணியிருக்கிறார் என்பதுதான் தான் அங்கு ஹைலைட்!
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.