அங்குசம் சேனலில் இணைய

சிறகுகள் இல்லா பறவைகள் இவர்கள் …

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிறகுகள் என்னும் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர் சங்கம் அறிவுசார் குறையுடையோர், ஆட்டிசம், மூளை  முடக்குவாதம் மற்றும் பல்வகை  இயலாமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களின் அமைப்பானது கடந்த 18 ஆண்டுகளாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆர்பிட் வளாகத்தில் இயங்கி வருகிறது.

இங்கு மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு தொழிற்பயிற்சி, பகல் நேர பாதுகாப்பு, அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சிறகுகளின் செயலாளர் கிருஷ்ணகுமாரி வரவேற்புரையுடன் தொடங்கிய இச்சங்கத்தின் 18-ஆம் ஆண்டு  விழாவுக்கு, திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக மக்கள் கல்வி இயக்கத்தின் இயக்குனர் மகேஸ்வரி, ரொட்டேரியன் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றார்கள்.

சிறகுகள்”அறிவுசார் குறைவடையுவர்களுக்கு அரசு அளித்து வரும் சலுகைகளை விரிவாக எடுத்துரைத்த, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன், சிறகுகள் அமைப்பில் பயிற்சி பெற்ற தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள் பெற்றுத்தருவதற்கு ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“இச்சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தையல் பயிற்சி, கேக் தயாரிப்பு, பிளம்பிங் போன்ற தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக மகிழ்வான செய்தியோடு நம்பிக்கையூட்டினார், மக்கள் கல்வி இயக்கத்தின் இயக்குனர் மகேஸ்வரி.

“இக்குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் காலத்துக்கு பின்பும்,  வாழ்வதற்கான இல்லம் கட்டும்போது தக்க வழிகாட்டுதலும் உதவிகளையும் செய்வதாக” உறுதியளித்தார், ரொட்டேரியன் சுப்பிரமணியன்.

சிறகுகள்சிறகுகளின் தலைவர் பொன் சுந்தரம் பேசும்போது, “பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் கூட்டு இல்லங்கள் அமைத்து பெற்றோர்கள் காலத்திற்கு பின் அங்கு வாழ்ந்திட வழி கண்டுவருவதாக  நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அறிவு சார் குறைவடையோர் பிறப்புகளை தடுக்கவும் தக்க மருத்துவமும் கிடைத்திட மருத்துவத்துறையில் அரசு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

விழாவில், சிறப்புக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் கண்களை கசிந்துருக செய்தன. தாய்மார்களின் கும்மி பாட்டு சிறப்புக்குழந்தைகள் குறித்தான விழிப்புணர்வூட்டின. சிறப்புக்குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் தயாரித்த பொருட்கள் பார்வைக்காகவும் விற்பணைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக் குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

சிறகுகள்தீர்மானம் – 1 :

மாதாந்திர உதவித் தொகை:

உடலும் அறிவும்  மனதும் குன்றியவர்கள் அறிவு சார் குறை உடையோர்கள்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

வாழ்வின் இடையில் வந்த இயலாமை இதுவன்று.

உழைத்து ஊதியம் பெற இயலாதவர்கள் என்பதோடு தன்னை பாதுகாப்பவர்களையும் உழைக்க விடாமல் செய்வதால் குடும்பத்தில் இரட்டிப்பு  வருமான இழப்பை  இவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

எனவே, தற்போது அரசு வழங்கி வரும் மாதாந்திர வாழ்வாதார கருணைத் தொகையை ரூ 2000 லிருந்து ரூ 8000 மாக உயர்த்தித் தர அறிவுசார் குறையுடைய பெற்றோர்களின் 18 ஆவது ஆண்டு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் – 2 :

முழுமையான மருத்துவ காப்பீடு. நிரமயா இன்சூரன்ஸ் திட்டத்தைப் போலவும் அதனை மேம்படுத்தி கூடுதல் காப்பீடுகளுடன் சிறப்பு நபர்களின் சிகிச்சைக்காக ஏற்படும் மருத்துவர் கட்டணம், தெரப்பிகள் மருந்து மாத்திரைகள் எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்கு ஆகும் செலவுகளை அரசே ஏற்கவேண்டும் .

சிறகுகள்தீர்மானம் – 3 :

மனவளர்ச்சி  குன்றியோரின் பெற்றோர்களுக்கு பின்னான வாழ்வை பாதுகாக்க ஆவண செய்ய வேண்டும். அறிவுசார் குறையுடைய குழந்தைகள் பிறப்பதற்கு மருத்துவத்திற்கும் தேவையான ஆய்வுகள் ஆராய்ச்சிகள் கொள்ளப்பட வேண்டும்.

தீர்மானம் – 4 :

ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவு சார் குறையுடைய குடும்பத்தாரில் ஒருவருக்கு அரசு வேலை ஒன்றினை அவரின் காப்பாளருக்கு அல்லது உடன்பிறப்புகளுக்கு வழங்கவேண்டும் .

சிறகுகள்தீர்மானம் – 5 :

அரசு தேர்வுகளில் இயல்பான மனிதர்களுடன் அறிவு சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் போட்டி போட இயலாது என்பதால் அவர்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டம் கேள்வித்தாள்கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயக்குமார் நன்றியுரையோடு விழா நிறைவடைந்தது.

கொண்டாட்ட மனநிலை என்பதாக அல்லாமல், குடும்பமே பங்கேற்ற விழாவாக அவர்களின் தற்போதைய வாழ்வாதாரம், மறுவாழ்வு, எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வாக, மனதுக்கு நெருக்கமான விழாவாக அமைந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.