அங்குசம் சேனலில் இணைய

20 ஆண்டுகளாக மெத்தை பஞ்சை உண்ணும் அதிசய பெண்!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நடிகர் சரத்குமார் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான ஏய் என்ற திரைப்படத்தில் ஒரு காமெடி சீனில் வடிவேலிடம் ஒருவர் நான் மூன்று வேலைகளிலும் பல்பு தான் சாப்பிடுவேன் என்று நகைச்சுவையாக கூறுவார். அதைப்போல் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 20 வருடங்களாக மெத்தையைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். நம் ஊரில் பலருக்கு வினோதமான பொழுதுபோக்குகள், பல போதை பழக்கங்கள் இருக்கலாம். சிலேட் குச்சி, பென்சில், மண், திருநீர், சுவர் போன்றவற்றை உண்ணும் பழக்கம் பெரும்பாலான மக்களிடம் இருந்தாலும் இந்த மெத்தை உண்ணும் பழக்கம் என்பது சற்று விசித்திரமாகதான் உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் என்ற பெண் தனது ஐந்து வயதிலிருந்தே மெத்தையைச் சாப்பிட்டு வருகிறார். இவர் மெத்தைகள், ஃபோம் , ஸ்பான்ஞ் போன்றவைதான் உணவுகள் என்றும் கூறுகிறார். ஜெனிபருக்கு ஐந்து வயதில் குடும்பத்தின் காரில் உள்ள ஸ்பான்ஞ் சாப்பிடத் தொடங்கியபோது இந்தப் பழக்கம் வந்துள்ளது. இவர் தினமும் ஒரு சதுர அடி மெத்தை சாப்பிடும் திறன் கொண்ட ஜெனிஃபர் ‘My Strange Addiction’ என்று இதனை கூறுகிறார். குறிப்பாக இவருக்கு ஃபோம் , ஸ்பான்ஞ் சாப்பிடுவதிலும் வெரைட்டி உள்ளதாம். அவருக்கு மிகவும் பிடித்தது தலையணையாம். மயோனைஸ், வெண்ணெய் மற்றும் மது எதுவுமில்லாமல் வெறும் மெத்தையை சாப்பிடுவதைதான் இவர் விரும்புகிறாராம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இதிலும் இவர் சுத்தம் பார்த்து மெத்தையில் இருந்து துர்நாற்றம் வீசினால் அதை சாப்பிடுவதை நிறுத்துவதாக கூறினார். ஜெனிபரின் இந்தப் பழக்கம் உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தவில்லை. மெத்தைகளை சாப்பிடுவதால் எந்தவித பக்கவிளைவுகளும் அவருக்கு இல்லையாம். மேலும் பல மருத்துவர்கள் ஜெனிபர் மெத்தைகளைச் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், அவர் தீவிர உடல்நல குறைபாடும், கல்லீரல் பாதிப்பு மற்றும் குடல் அடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் இருப்பினும் இதை காதில் கூட வாங்காத ஜெனிபர் தொடர்ந்து மெத்தைகளை சாப்பிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

—  மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.