அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்கும் அதிசயப் பெண்!

திருச்சியில் அடகு நகையை விற்க

இது வரமா, இல்ல சாபமா? நாம் சிறுவயதில் கேட்ட  ஸ்லீப்பிங் பியூட்டி கதையை உண்மையாக்கி இருக்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த ஜோனா என்ற  38 வயதான பெண். இவர் இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்குவாராம். இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா என்பது ஒரு நரம்பியல் தூக்கக் கோளாறு.  இது ஒரு முழு இரவு தூக்கத்திற்குப் பிறகும் உடலை சோர்வடையச் செய்து தூக்கத்தை ஏற்படுத்தும். இவருக்கு பல மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்ட போதும் தூக்கத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த நோய்க்கு சிகிச்சைகள் இருந்தாலும், இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.

ஸ்லீப்பிங் பியூட்டி ஜோனா
ஸ்லீப்பிங் பியூட்டி ஜோனா

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மேலும் இது குறித்து பேசியிருந்த ஸ்லீப்பிங் பியூட்டி ஜோனா, நான் ஒரு நாளைக்கு சுமார் 22 மணி நேரம் தூங்குவதாகவும், கடந்த 2017 ஆம் ஆண்டு தான் சோர்வாக இருப்பதை உணர தொடங்கி கார், கிளப், வேலை செய்யும் இடம் என எப்போதுமே தூக்கம் வந்து கொண்டே இருந்ததால் வேலையை விட்டுவிட்டு வீட்டில் தூக்கம் வந்தபோதெல்லாம் தூங்கியதாகவும் பல மருத்துவர்களிடம் சென்று பலனற்ற ஆலோசனைகள் மற்றும் சிகிச்சையை பெற்றதாகவும் கூறினார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஸ்லீப்பிங் பியூட்டி ஜோனாஇரண்டு குழந்தைகளுக்கு தாயான நான் தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையானதை கூட செய்ய முடியவில்லை என்றும், தனக்கு ஒரு நல்ல மருத்துவர் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எப்போது தூங்கினேன்? எப்போது எழுந்தேன்? என்பது கூட தெரியவில்லை என்றும் இன்றைய தினம் என்ன? என்று கூட தெரியாது,  அந்த அளவுக்கு நான் என்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

https://www.livyashree.com/

ஸ்லீப்பிங் பியூட்டி ஜோனாமேலும் கடந்த எட்டு ஆண்டுகளாக அவரது நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் ஒரு சில மணி நேரங்கள் அவர் விழித்திருந்தாலே அது மிகப்பெரிய விஷயமாக தெரிகிறது என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

 

 —    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.