அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பன் தோசா ! சமையல் குறிப்பு – 27

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு பாக்க போற ரெசிபி பன் தோசை, பன் பரோட்டா கேள்விப்பட்டிருப்போம். இது கொஞ்சம் டிஃபரண்டா பன் தோசா, சரி இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:-

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

ரவை 1 கப், தயிர் 1 கப், பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது 1, கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சிறிதளவு, கடுகு உளுத்தம் பருப்பு தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவை, ஒரு கப் தயிர் சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற விடவும். அதன் பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு, வெங்காயம், கருவேப்பிலை கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து ஊறவைத்த ரவை கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பின் சிறியதொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கலந்த மாவை ஒரு கரண்டி ஊற்றி மூடி போட்டு இரண்டு நிமிடம் வேக விடவும். அதன் பின் திருப்பி போட்டு இரண்டு நிமிடம் வேக விடவும்.

பன் தோசா
பன் தோசா

இப்போது சுவையான மொறு மொறு பன் தோசா தயார். இதனை தேங்காய் சட்னி அல்லது பருப்பு சாம்பாருடன் சுவைத்து சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும்.

 

—   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.