நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த அற்புத திட்டம்!
ஆலன் என்பவர் நடத்தி வரும் ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன்’ கடந்த ஐந்து வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது.
இந்நிறுவனத்தின் சார்பில் உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் 5000 பேருக்கு
பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல் பட்டு, சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.
ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நடத்திய இந்த வருட நிகழ்வினில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர்கள் ஆதி, சந்தோஷ் பிரதாப், மஹத், மைம் கோபி, கண்ணா ரவி, முத்துக்குமார் ஆகியோருடன் கலந்துகொண்டு, இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வினில்
ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது..
“ஆலன் இதை 6 வருடமாக செய்து வருகிறார். நாம் நன்றாக இருக்கும் போது, பலர் நம்மைத் தேடி வருவார்கள். ஆனால் நாம் கஷ்டத்தில் இருக்கும் போது யாரெல்லாம் வருவார்கள் என்றால் அது கேள்விக்குறிதான். ஒரு 5000 பேருக்கு பிரியாணி போடணும்னா எவ்வளவு செலவாகும் எனத்தெரியும். ஆனால் பெரிய பெரிய ஆட்களிடம் அதற்காக உதவி கேட்டுப் போனபோது, யாரும் உதவ முன்வரவில்லை. இதற்காக உண்மையாக ஸ்பான்ஸர் தந்த நல்ல உள்ளங்களுக்குப் பெரிய நன்றி.

உதவி செய்யும் நண்பர்கள் தான் உலகில் மிக முக்கியம், அவர்களை விட்டுவிடாதீர்கள். நான் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷனில் ஒரு உறுப்பினர் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. அதை நான் கர்வமாக சொல்லிக்கொள்வேன். இந்த முயற்சிக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். இந்த முயற்சி தொடர்ந்து நடக்க வேண்டும்.
இந்த மிகப்பெரிய செயல்பாட்டில் அடுத்ததாக ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் சார்பில் ஹோப் என ஒரு வெப்சைட் துவங்கியுள்ளோம், இந்த ஆப் உங்கள் மொபைலில் வைத்து மாதம் 35 ரூபாய் சப்ஸ்க்ரைப் செய்யலாம், அதன் மூலம் பலர் பசியாறுவார்கள். நாம் அனைவரும் நம்மால் முடிந்த ஆதரவைத் தர வேண்டும். நான் என்றும் ஆலனுக்குத் துணையாக இருப்பேன்”.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.